இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் கறுப்புக் கொடி: மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

  • March 17, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. […]

இலங்கை செய்தி

“எரிபொருள் சிக்கனம்” – ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

“எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் . அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நேற்று […]

இந்தியா செய்தி

முட்டைகளில் காலாவதி திகதி அவசியம் – புதிய உத்தரவு அடுத்த மாதம் முதல் அமுல்

  • March 17, 2026
  • 0 Comments

  கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் காலாவதி திகதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் பழைய முட்டைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பனை செய்ய முடியாது. இதனால், உ.பி.யில் கடைக்காரர்கள் இனி […]

இலங்கை செய்தி

ஹொங்கொங்கிலிருந்து கொழும்பை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

  • March 17, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘சீஃபிரண்டியர்’ என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

  • March 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ஆயுத உற்பத்தி ஆலைகளையும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தை மேற்கோள் காட்டி, தஸ்னிம் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலிய காவல்துறைக்கு சொந்தமான இணைய மையங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறப்படுகிறது. “இன்று காலை முதல், சியோனிச ஆட்சியின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ரஃபேல் ஆயுத உற்பத்தி வளாகத்தையும் ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

போர் பதற்ற நெருக்கடி – இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

  • March 17, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவத்த அவர் “வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 க்கு ஊடக சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் […]

உலகம் செய்தி

ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் 16 பேர் குவைட்டில் அதிரடியாக கைது – லெபனான் கண்டனம்

  • March 17, 2026
  • 0 Comments

குவைட்டை இலக்காகக் கொண்ட ஹெஸ்புல்லாவின் சதித்திட்டம் எனக் கூறப்படுவதை லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 குவைட் குடிமக்கள் மற்றும் 02 லெபனான் நாட்டினர்கள் உட்பட 16 பேரை கைது செய்துள்ளதாக குவைட் உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, லெபனான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

ஐரிஸ் தேனா துயரம் – 84 பேரினதும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு

  • March 17, 2026
  • 0 Comments

ஈரான் கடற்படையினரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு தெஹ்ரான் மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக் கடற்கரைக்கு அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கியதாக கூறப்படும் ஐரிஸ் தேனா (IRIS Dena)கப்பலில் உயிரிழந்த 84 மாலுமிகளுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் “இந்த தியாகிகளின் நினைவில் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உருவாகுவார்கள் என்பதை எதிரிகள் உணர வேண்டும்” என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனை மேற்கோள்காட்டி டஸ்னிம் (Tasnim) […]

உலகம் செய்தி

ஹர்முஸ் கப்பல் பாதுகாப்பு- ஈரான் , ஈராக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • March 17, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் இயக்கம் குறித்து ஈரான் மற்றும் ஈராக் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஈராக் தெரிவித்துள்ளது. ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரானின் எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஈராக் அமைச்சர் ஹயான் அப்துல்-கனி (Hayan Abdul-Ghani) தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த முன்னேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதேவேளை, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, “ஹோர்முஸ் […]

உலகம் செய்தி

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு – இஸ்ரேல் அறிவிப்பு

  • March 17, 2026
  • 0 Comments

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி (Ali Larijani) கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், அலி லாரிஜானியிடமிருந்து செய்தி ஒன்று வெளியாகவுள்ளதாக ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) மற்றும் ‘மெஹர்’ (Mehr) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், ஈரானிய அதிகாரிகளிடமிருந்து எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.