உலகம் செய்தி

ஈரானில் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர். ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நைஜல் வலியுறுத்தல்

  • March 18, 2026
  • 0 Comments

நாட்டின் எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சீர்திருத்த UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பிரதமரை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கும் கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். வடகடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான புதிய உரிமங்களைத் திறக்கவும், ஆய்வு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைக்கவும் பிரதமர் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்தார். மேலும் வரி வருவாயை அதிகரிக்குமாறும் விலைகளைக் குறைக்குமாறும் சீர்திருத்த […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தடுப்பூசி

  • March 18, 2026
  • 0 Comments

கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 5,000 மாணவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பி (Meningitis B) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. மேலும், கென்ட் முழுவதும் உள்ள வளாகங்களில் ஏற்கனவே 2,500 டோஸ் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

“வடக்கிலுள்ள பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிக்க தடை”

  • March 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய […]

ஐரோப்பா செய்தி

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானது

  • March 18, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானவையென நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் நிரந்தர வசிப்பிடத்திற்குத் தகுதி பெறும் காலத்தை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும், அகதிகளுக்கு 20 ஆண்டுகளாக நீடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாற்றங்கள், மக்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதேவேளை, உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) […]

உலகம் செய்தி

ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது

  • March 18, 2026
  • 0 Comments

தெற்கு பார்ஸில் (South Pars, Iran) உள்ள ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC – Islamic Revolutionary Guard Corps) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் (Tasnim) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு பார்ஸ் (Pars) உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கொண்ட பகுதியாகும், இதில் கட்டார் மற்றும் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இனி வாக்காளர் படங்களுடன் கூடிய சீட்டு இல்லை

  • March 18, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டில் வாக்காளர் படங்களுடன் கூடிய சீட்டுக்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை காலம் தேர்தல்களின் போது வாக்களிக்கும் இடங்கள் குறித்த விபரங்களை, வாக்காளர்களின் படங்களுடன் தேர்தல் ஆணையம் வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை, வாக்காளர் தகவல் சீட்டு, வாக்குப்பதிவு செய்வதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார், கடவுச்சீட்டு, பேன் அட்டை (PAN) […]

உலகம் செய்தி

ஈரானின் உளவுத்துறை அமைச்சரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

  • March 18, 2026
  • 0 Comments

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிபபை Esmaeil Khatib கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இன்று (18) தெரிவித்துள்ளது. ஈரானின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது. இவரின் இழைப்பு ஈரானிய அரசாங்கத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வெகுவாகப் பலவீனப்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்டாமர்-படோனெக் இடையே வாதப் பிரதிவாதம்

  • March 18, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரான பீட்டர் மண்டேல்சனின் (Peter Mandelson) புதிய நியமனம் குறித்து பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) அவருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினாரா என எதிர்க்கட்சித் தலைவர் கெமி படோனெக் (Kemi Badenoch) கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் அவர் இன்று கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது ஸ்டார்மர் இந்த கேள்வியைத் தவிர்த்து, மண்டேல்சனின் நியமன செயல்முறை போதுமான வலுவுடன் நடைபெறவில்லை என பதிலளித்தார். இதன்பின்னர் பிரதமர் தனது கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை படோனெக் குற்றம் சுமத்தினார். தொடர்ந்து இருவரிடையே […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள ‘மத்திய கிழக்கு போர்’!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் Jim Chalmers எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அரசுச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் வரிச் சீர்திருத்தங்கள் போன்ற அதிரடி மாற்றங்களைச் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, எரிபொருள் விலையேற்றம் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் […]