இலங்கை செய்தி

“1, 930 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்பு: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கைதுகள்”

  • March 18, 2026
  • 0 Comments

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது. அத்துடன், 4, 520 கிலோ கஞ்சா, 1, 066 கிலோ ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1, 930 கிலோ ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து 13 ஏவுகணைகள், 27 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளிலிருந்து, 327 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள், மற்றும் 1,699 ட்ரோன்களையும் எதிர்கொண்டதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 2026 இன் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் வெப்பமான நாள் இன்று

  • March 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பநிலை 20 பாகை செல்ஸியஸ் இற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் வெப்பமான நாளாக இன்றை தினம் அமையலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தில், இந்த ஆண்டின் இதுவரையிலான மிகவும் வெப்பமான நாள் செவ்வாய்க்கிழமை பதிவானது. மோரே கடற்கரையில் உள்ள லாஸ்ஸிமவுத்தில் 16.1°C வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இந்த வெப்பமான வானிலை, பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும் வசந்தகால சம […]

இலங்கை செய்தி

இளம் சட்டத்தரணி மரணம்: யாழில் பெரும் சோகம்!

  • March 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி நிகாஷ் நேற்று மாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன்போது, தனக்கு நெஞ்சுப் பகுதியில் ஒருவித அசௌகரியம் இருப்பதாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இஞ்சித் தேநீர் வழங்கப்பட்ட நிலையில், இரவு 7 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட் அமைப்பிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட உளவாளிக்கு ஈரானில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டு போரின் போது (12 நாள் போர்) ஈரானின் முக்கிய பாதுகாப்பு இடங்களை படமெடுத்து அவர் வெளிநாட்டிற்கு அனுப்பினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகள் இரகசிய பயிற்சி பெற்ற பின்னரே அவர் இந்த உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

இலங்கை

கொழும்பில் Parking Free!

  • March 18, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இனி வாகனங்களை நிறுத்துவதற்கு தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

இஸ்ரேல்மீது ஈரான் கொத்துக் குண்டு தாக்குதல்: 192 பேர் காயம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் உக்கிர தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மேற்படி கொத்து குண்டு தாக்குதலில் இஸ்ரேலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது. அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” […]

இலங்கை செய்தி

தெற்கில் நால்வரை பலியெடுத்த கோர விபத்து: ஐவரின் நிலைமை கவலைக்கிடம்!

  • March 18, 2026
  • 0 Comments

அம்பலாங்கொடை, கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு இ.போ.ச. SLTB பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை செய்தி

எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்த இலங்கையில் புதிய ஏற்பாடு!

  • March 18, 2026
  • 0 Comments

இலங்கையில் QR குறியீட்டு முறைமையின்கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு நாளை (19) முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால் (0, 2, 4, 6, 8) இரட்டை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெறலாம். (உ+ம் 20,22 ) இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால் ஒற்றை எண்கள் […]

இலங்கை செய்தி

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை

  • March 18, 2026
  • 0 Comments

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை(18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது. ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என […]