ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்களை வழங்கும் இரு மேற்குலக நாடுகள்

200 மில்லியன் பவுண்டுகள் ட்ரோன் தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு மேலும் ஆயிரக்கணக்கான ட்ரோன்களை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. சர்வதேச முயற்சியில் லாட்வியாவுடன் இணைந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித்தனமான அபிலாஷைகளில் தோல்வியடைவதை உறுதிசெய்ய, இங்கிலாந்து மற்றும் லாட்வியா இணைந்து, உக்ரைனுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், இந்தப் போரில் வெற்றி பெறவும் தேவையான திறன்களை உக்ரைனுக்கு அளிக்கும்” என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சி மாநாடு; இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் ..

  • February 15, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் […]

ஆப்பிரிக்கா

மத்திய கிழக்கு காங்கோவில் இரு தென்னாப்பரிக்க வீரர்கள் உயிரிழப்பு!

  • February 15, 2024
  • 0 Comments

மத்தியில் கிழக்கு காங்கோவில் மோட்டார் வாகனம் ஒன்று தீப்பற்றியதில்  இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஆயுதப்படையினர்  தெரிவித்துள்ளனர். நாட்டின் அனைத்து ஆயுதப் படைகளையும் மேற்பார்வையிடும் தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை மோட்டார் வாகனத்திற்கு வேண்டுமென்று தீவைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிழக்கில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போராடும் தென்னாப்பிரிக்க அபிவிருத்திச் சமூகத்தின் பணியின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா காங்கோவுக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா இந்த வாரம் கிழக்கு காங்கோவிற்கு 2,900 […]

ஐரோப்பா

உக்ரைனுக்கும் – பிரான்ஸுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

  • February 15, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கும், பிரான்ஸுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இருநாட்டு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது ஜெர்மனி வழியாகவும் செல்லும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எலிசே ஜனாதிபதி மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த குறிப்பிட்ட விவரங்களை எதுவும் வெளியிடவில்லை. “உக்ரைனுக்கும் உக்ரேனிய மக்களுக்கும், நீண்ட காலத்திற்கும் அதன் அனைத்துப் பங்காளிகளுக்கும் இடையறாத ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கான பிரான்சின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு” இந்த விஜயம் மக்ரோனுக்கு ஒரு வாய்ப்பாக […]

பொழுதுபோக்கு

அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வந்த செய்தி

  • February 15, 2024
  • 0 Comments

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவித்தனர். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் […]

இலங்கை

இலங்கையில் 2023ல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் பதிவு!

2023 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) க்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 404 முறைப்பாடுகளும், […]

பொழுதுபோக்கு

Godzilla x Kong: மீண்டும் மிரள வைக்க வந்தது புது டிரைலர்

  • February 15, 2024
  • 0 Comments

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான, ரசிகர்களை கவரக்கூடிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், காட்ஸில்லா மற்றும் கிங் காங் திரைப்படங்கள். இந்த இரண்டையும் முதல் முறையாக காட்ஸில்லா vs காங் எனும் திரைப்படத்தில் இணைத்தனர். கதையின்படி இந்த மாஸ்டர்கள் அனைத்தும் பூமியின் காவலர்களாக இருந்தவர்கள் என கூறுகிறார்கள். பூமிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இவர்கள் வருவார்கள் என்று தான் காட்ஸில்லா மற்றும் காங் இருவரையும் அடையாளப்படுத்தி வருகின்றன. இதுவரை வெளிவந்த படங்களிலும் அப்படி தான் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

இலங்கை

அரசியல் கட்சிகளுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

  • February 15, 2024
  • 0 Comments

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசியல் பிளவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, தேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் சிக்கல்!

  • February 15, 2024
  • 0 Comments

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 5G தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும்,  இதனால் எப்பொழுது இலங்கையில் 5G தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பெருமளவு செலவுகள் ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பாரியளவில் முதலீடு செய்ய நேரிடும் எனவும் […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்!

  • February 15, 2024
  • 0 Comments

அஸ்வசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15.02) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும்,  விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஆன்லைன் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கூடுதலாக, பிரதேச செயலகங்களில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கும் வழங்கலாம் […]