மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குல் – இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

  • March 1, 2024
  • 0 Comments

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். 30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது. மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர். டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு […]

இலங்கை

இலங்கையில் எரிபொருள் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • March 1, 2024
  • 0 Comments

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று (29.03) நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும். இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

மத்திய கிழக்கு

காசா பகுதியில் உதவித் தொடரணிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

  • March 1, 2024
  • 0 Comments

காசா பகுதியில் உதவித் தொடரணிக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் சிக்கி 112 பாலஸ்தீன அகதிகள் உயிரிழந்துள்ளதுடன் 760 பேர் காயமடைந்துள்ளனர். காஸா பகுதிக்கு உதவிகளை கொண்டு வந்த லொறிகளுக்கு அருகில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூடு, நெரிசல் மற்றும் லொறிகள் மீது மோதியதில் மக்கள் உயிரிழந்து காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது இஸ்ரேல் நடத்திய படுகொலை என்று பலஸ்தீன சுகாதார […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Apple Car கனவு திட்டம் – கைவிட்ட ஆப்பிள்

  • March 1, 2024
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால கனவுத் திட்டமான ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்திடத்தில் தங்கள் முழு முயற்சியை போடுவதற்கு பதிலாக, ஏஐ அம்சத்தில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களின் முதல் எலக்ட்ரிக் கார் கனவு திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக முயற்சித்து வந்தனர். ஆனால் இத்திட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் இதைக் கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு எத்தனை ஆண்டுகளாக ஆப்பிள் […]

ஐரோப்பா

லண்டனில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்கு பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு!

  • March 1, 2024
  • 0 Comments

லண்டனில் பிராட்வே நாடகம் நடத்த திட்டமிட்டுள்ள கறுப்பர்களுக்கான நிகழ்வு தவறானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. லண்டனின் வெஸ்ட் எண்டில் உள்ள நோயல் கோவர்ட் தியேட்டரில் காண்பிக்கப்படும் “ஸ்லேவ் ப்ளே” என்ற நிகழ்வு ( Black Out) கறுப்பர்களை அடிப்படையாகக் கொண்டது. இந்நிகழ்வு சமூகத்தில் பல சிக்கல்களை தோற்றுவிக்கும் என நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், கலைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வயோதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை – வறுமையால் எடுத்த தீர்மானம்

  • March 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 63 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கடுமையான அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடது கட்சி ஓய்வூதியம் பெறுவோர் வறுமையை முக்கிய உந்துதலாகக் குறிப்பிடுகிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்களுக்கமைய, ஜெர்மனியில் அதிகமான மக்கள் தங்கள் ஓய்வை தாமதப்படுத்த தேர்வு செய்கிறார்கள். ஜெர்மனியில் ஓய்வூதிய வயது தற்போது 66 வயதாக உள்ளது, மேலும் 63 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற முடியும். ஆனால் 2020 மற்றும் 2023 க்கு இடையில், 63 […]

ஆசியா

பங்களாதேஷில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 45 பேர் பலி!

  • March 1, 2024
  • 0 Comments

பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது கட்டிடத்தின் வழியாக வேகமாக பரவியது, டஜன் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம்

பிரேசிலில் பதிவான 2000 காட்டுத்தீ சம்பவங்கள்!

  • March 1, 2024
  • 0 Comments

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் உள்ள ரோரைமா மாநிலத்தில் 2000 தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,        செயற்கைக்கோள் சென்சார்கள் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 28 க்கு இடையில் தீப்பிழம்புகளைக் கண்டறிந்ததாகக் கூறியது. தீ விபத்துகளின் எண்ணிக்கை மாதாந்திர சராசரியான 376 ஐ விட மிக அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எல் நினோ, பசிபிக் பகுதியின் இயற்கையான மற்றும் தற்காலிக வெப்பமயமாதல், வடக்கு வெப்பமண்டல அட்லாண்டிக் நீரின் […]

ஐரோப்பா

பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகளின் பரிதாப நிலை – ஒருவர் பலி – இருவர் மாயம்

  • March 1, 2024
  • 0 Comments

பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட அகதி ஒருவர் பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த மேலும் இருவர் காணாமல் போயள்ளனர். பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக சிறிய மீன்பிடி படகில் நேற்று முன்தினம் சிறிய படகு ஒன்றில் இருந்து அகதி ஒருவர் மீட்கப்பட்டார். அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், அவருடன் மேலும் மூவர் பயணித்ததாகவும், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கடற்படையினர் தேடுதல் மேற்கொண்டு ஒருவரது சடலத்தை கண்டுபிடித்து மீட்டனர். அவர்கள் சிறிய மீன்பிடி படகை மாத்திரம் நம்பி பிரித்தானியா […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் குளிர்சாதன வசதிகள் இல்லை – வீரர்களுக்கு வெளியான தகவல்

  • March 1, 2024
  • 0 Comments

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி தேவைப்படாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர். கோடைக்காலத்தில் விளையாட்டுகள் நடைபெற்றாலும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். சூரிய வெளிச்சம் உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டடங்களின் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டாளர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் கட்டடங்களை வடிவமைத்துள்ளதாக அவர்கள் கூறினர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மொத்தம் 2,800 வீடுகள் பயன்படுத்தப்படும். வீடுகள் வழக்கத்தை விட பாதிக்கும் […]