இலங்கை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை – பாடசாலை அதிபர் ஒருவர் கைது

  • March 4, 2024
  • 0 Comments

பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல பொலிஸார் சந்தேக நபரை நேற்று (03) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபர் இன்று (04) மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா

கர்நாடகா- 3 பெண்கள் மீது ஆசிட் வீச்சு… கல்லூரியில் கேரள மாணவன் வெறிச்செயல்!

  • March 4, 2024
  • 0 Comments

கர்நாடகா மாநிலத்தில் அரசு கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் ஆசிட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடாபா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடக மாநில பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகள் துவங்கியது. இதையடுத்து கல்லூரியில் மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்ம […]

இலங்கை

மன்னாரில் சாந்தனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

ரஜீவ் காந்தி கொலைவழக்கில் (04.03.2024 ) இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சிறையிலேயே தனது வாழ்வை அர்பணித்து இறந்து போன சாந்தனின் உடலுக்கு வடக்ககில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது இந்த நிலையில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அதன் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள்,முன்னால் நகரசபை பிரதேச […]

பொழுதுபோக்கு

அந்த இடத்தில் பால் ஊற்றும் காட்சி; இயக்குநர் செய்த அட்டகாசம்..

  • March 4, 2024
  • 0 Comments

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? என்னும் வசனத்தை பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு பட வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்த இவருக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் […]

ஆசியா

லெபனான் – இஸ்ரேல் இல்லையில் பதற்றம் : ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலி

லெபனானையும் இஸ்ரேலையும் பிரிக்கும் நீலக் கோட்டிற்கு அருகாமையில் உள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள மார்கலியோட்டில் ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், அவர்கள் அனைவரும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்ர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள இரண்டு மருத்துவமனைகள் மற்றும் பெய்லின்சன் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

ஹங்வெல்ல பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

  • March 4, 2024
  • 0 Comments

ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிரிபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மன்னா ரொஷானின் சகோதரரே உயிரிழந்துள்ளார். தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது […]

இலங்கை

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழு பாடங்களாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதிருக்கவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் […]

பொழுதுபோக்கு

GOAT எப்போது வரும்? சோகத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்து கூறிய வெங்கட் பிரபு

  • March 4, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலம் மட்டுமே […]

ஐரோப்பா

ஜேர்மனில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; நால்வர் பலி, 58 பேர் படுகாயம்!

  • March 4, 2024
  • 0 Comments

ஜேர்மனி நாட்டின் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது. செவிலியர்கள் பணியாற்ற கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 4 பேர் பலியாகி உள்ளனர். 58 பேர் காயமடைந்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் […]

வட அமெரிக்கா

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்: டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே

  • March 4, 2024
  • 0 Comments

குடியரசுக் கட்சியின் பிரைமரியில் வாஷிங்டன் டிசியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தென் கரோலினாவின் முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தோற்கடித்தார். முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 676 வாக்குகளைப் பெற்றார். நிக்கி ஹாலே 1,274 வாக்குகளைப் பெற்றிருந்தார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக 2024 பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதியை எதிர்த்து அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த தேர்தலில் நிக்கி ஹாலே கிட்டத்தட்ட 63 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னதாக மிசோரி மற்றும் இடாஹோவில் […]