பொழுதுபோக்கு

GOAT எப்போது வரும்? சோகத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்து கூறிய வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ .

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலம் மட்டுமே மீதமுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை முதலில் ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இப்போது கிடைத்த தகவலின்படி, இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனினும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு,

படத்திற்கான தொழில்நுட்ப வேலைப்பாடுகள் ஏராளமாக இருப்பதால் இப்போதைக்கு படம் வராது என்று கூறினார்.

அதிலும் விஜய்யின் பிறந்தநாளுக்கு படம் இல்லை என்பது உறுதியானது. இதேவேளை, ஒரு பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்றும் கூறிகார்.

இதேவேளை, படத்தின் போஸ்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவிடலாம். ஆனால் ஃபெஸ்ட் சிங்கில் எல்லாம் இப்போதைக்கு இல்லை என்று கூறினார். இதனால் தளபதி ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content