இலங்கை

தாமரை கோபுரத்தில் விருந்துபச்சார நிகழ்வு- ஜோடி மரணம்!

  • March 12, 2024
  • 0 Comments

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர். முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி (27) தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ (22) இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நால்வர்…லொரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!

  • March 12, 2024
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லொரி மோதியதில் பேருந்து படியில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில் மூவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல் […]

இலங்கை

இலங்கையில் பரேட் சட்டத்தை நிறுத்த தீர்மானம் : தற்போது வெளியான புதிய அறிவிப்பு!

  • March 12, 2024
  • 0 Comments

பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேவையான கடன் மீட்பு திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (12.03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான உண்மைகள் விளக்கப்பட்டன. இதன்படி, வரைவாளரால் தயாரிக்கப்பட்ட  சிறப்பு ஏற்பாடுகள், திருத்தம் என்பன  சட்டமூலத்தினால் வழங்கப்பட்ட கடன்களை மீளப்பெறுவதற்கு  சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் பால்மாவின் விலை குறைப்பு!

  • March 12, 2024
  • 0 Comments

இலங்கையில் வரும் வெள்ளிக்கிழமை (15.03) முதல்  பால்மாவிற்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

லண்டன் சிறைச்சாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகள்; 194 கைதிகள் இடமாற்றம்

  • March 12, 2024
  • 0 Comments

பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் […]

இலங்கை

கம்பஹா தேரர் படுகொலை சம்பவம் -சந்தேக நபர் சுட்டு கொலை..!

  • March 12, 2024
  • 0 Comments

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் […]

பொழுதுபோக்கு

ஜோவிகாவின் ட்ரெயினருடனான அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட காதலி… அடபாவிகளா

  • March 12, 2024
  • 0 Comments

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல ஜிம் கோச் மணி என்பவரின் காதலி அவர் மீது போலீசில் புகார் கொடுத்ததோடு, யூடியூப் சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து இருந்தார். அதில் மணி நிறைய பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அதை தட்டி கேட்ட தன்னை உடல் அளவில் காயப்படுத்தியதாகவும் சொல்லியிருந்தார். அத்தோடு அது சம்பந்தப்பட்ட நிறைய ஆதாரங்களையும் காட்டி இருந்தார். இப்போது இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அந்த பாதிக்க பட்ட பெண்ணோடு மணியின் முன்னாள் மனைவி கவிதா […]

பொழுதுபோக்கு

ஒரு கோடியை தூக்கி கொடுத்து பக்கா அரசியல்வாதியாக மாறிய தளபதி

  • March 12, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அரசியலுக்கு சரியான ஆள் தான் இவரே என்று மக்களே சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு விஷயங்களாக செய்து வருகிறார் தளபதி. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மாணவர்களின் கல்வி என்ற திட்டத்தை கையில் எடுத்து விட்டார். அதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்தார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சிறுமி மரணத்திற்கு எதிராக குரல் கொடுத்தது, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் CAA திட்டத்திற்கு எதிராகவும் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் – இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

  • March 12, 2024
  • 0 Comments

மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கமைய, புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.35 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை […]

செய்தி

பிரித்தானியாவை அதிரவைத்த கும்பல் – 53 உயர் ரக வாகனங்களை திருடியவர்களுக்கு நேர்ந்த கதி

  • March 12, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 3.7 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள 53 உயர் ரக வாகனங்களைத் திருடிய குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ஆம் திகதி Guildford Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 4 பேருக்கு மொத்தம் 12.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் குரோய்டன் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். ஹார்லியில் உள்ள ரெய்கேட் சாலையைச் சேர்ந்த 29 வயதுடைய பெர்ரி லவ்ஜாய் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. க்ராய்டனில் உள்ள ஷோர்ஹாம் […]