தமிழ்நாடு

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நால்வர்…லொரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லொரி மோதியதில் பேருந்து படியில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில் மூவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.

3 முறை எச்சரித்த பிறகும் பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர் மீது வழக்கு: ஆரணி  டிஎஸ்பி கோட்டீஸ்வரன் எச்சரிக்கை | bus footboard issue: file case on  Students: Arani ...

மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர். இந்த 4 மாணவர்களும், மதுராந்தகம் பகுதியில் உள்ள மாலோலன் கலைக்கல்லூரியில் படித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த 4 கல்லூரி மாணவர்களும் மோகல்பாடி, ராமாபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

படியில் பயணித்தால் நொடியில் மரணம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் பயணித்ததால் இன்று அவர்கள் உயிருடன் இல்லை என்பதே பெற்றோரின் வேதனையாக உள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content