ஐரோப்பா

ரஷ்யாவிற்கு சீனா ‘மிகத் தெளிவான செய்திகளை’ அனுப்ப வேண்டும் : பிரான்ஸ் வலியுறுத்தல்

உக்ரைன் மீதான போர் குறித்து ரஷ்யாவிடம் சீனா தெளிவாக பேச வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் உயர்மட்ட தூதர் கூறியுள்ளார். “ரஷ்யாவிற்கு சீனா மிகத் தெளிவான செய்திகளை அனுப்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று இம்மானுவேல் மக்ரோனின் வெளியுறவு மந்திரி ஸ்டீபன் செஜோர்ன், பெய்ஜிங்கில் தனது சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்த பிறகு கூறினார். “உக்ரேனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் நிலையான அமைதி இருக்காது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். “சர்வதேச சட்டத்தின்படி அமைதி இல்லை […]

பொழுதுபோக்கு

கேரள மாந்திரீகத்தில் கட்டுப்பட்டுள்ள விஜய்! ஆட்டிப்படைக்கும் நபர்… அப்பா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

  • April 1, 2024
  • 0 Comments

விஜய் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவாகுவதற்கு முக்கிய காரணம் அவருடைய அப்பா தான். அவருடைய வழிகாட்டுதல் தான் இந்த உயரத்தை அவர் அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ இன்று அப்பா மகன் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றனர். அதில் விஜய் சொந்த வாழ்க்கை குறித்து எதையும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Laugfs Gas PLC தனது உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (ஏப். 01) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 218 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 […]

இலங்கை

கட்டுகெந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை

  • April 1, 2024
  • 0 Comments

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அவரது மகன் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மூலம் வர்த்தகர்களுக்கு கிடைத்த பாரிய இலாபம்!

  • April 1, 2024
  • 0 Comments

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் சுமார் 8,000 கோடி ரூபாவை சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியுள்ளதாக வழிவகைகள் குழுவில் தெரியவந்துள்ளது. அந்தக் குழுவின் தலைவர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பான அறிக்கைகளை இன்று (01.04) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உண்மைகளை தெளிவுபடுத்தினார். இதேவேளை, இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் என்பன அரசாங்கத்திற்கு  1,066 ரூபாய் வரிகள் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி […]

தென் அமெரிக்கா

ஈக்வடார்- விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் – 8 பேர் பலி!

  • April 1, 2024
  • 0 Comments

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் கயாக்யூலி மாகாணம் குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டு நடத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் […]

ஆசியா

பாகிஸ்தான் – சகோதரியை ஆணவ கொலை செய்த சகோதரன் … தண்ணீர் கொடுத்து தேற்றிய தந்தை!!

  • April 1, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோபா தேக் சிங் நகரருகே வசித்து வருபவர் அப்துல் சத்தார். இவருடைய மகள் மரியா பீபி (22). பீபிக்கு, முகமது பைசல் மற்றும் ஷெபாஸ் என இரு சகோதரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டில் இரவு வேளையில் படுக்கையறையில் பீபி இருந்தபோது, பைசல் வந்துள்ளார்,அவர் திடீரென பீபியை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அப்போது, பீபியின் தந்தை அப்துல் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் எதிர்ப்பு எதுவும் […]

ஆசியா

நியூசிலாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் மலேசிய மாணவர்கள் பலி!

  • April 1, 2024
  • 0 Comments

நியூசிலாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் இரு மலேசிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூசிலாந்தின் – டெகாபோ ஏரிக்கு அருகில் குறித்த ஐவரையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூன்று மாணவர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள அதன் உயர் ஸ்தானிகராலயம் மூலம், கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கும் என்று மலேசிய பிரதமர் […]

இலங்கை

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

  • April 1, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜூலை மாதம் இறுதிவரை இடம்பெறும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது […]

பொழுதுபோக்கு

தலைவர் 171 படத்தின் பெயர் இதுவா? லோகேஷின் ரகசியம் கசிந்தது…

  • April 1, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தப் படத்துக்கு பிறகு கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்தாரோ […]