தென் அமெரிக்கா

ஈக்வடார்- விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் – 8 பேர் பலி!

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் கயாக்யூலி மாகாணம் குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமுள்ள ஈக்குவடாரில் அவ்வப்போது கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேவேளை பொதுமக்கள் மீதும் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content