இலங்கை

இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகலுன் ஜெலென்ஸ்கி அவசர சந்திப்பு

இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து ட்ரோன் தயாரிப்பு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy X பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றும் ஒரு ஒருங்கிணைந்த மின்னணு போர் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டம், உக்ரைன் மற்றும் அதன் வீரர்களை ரஷ்ய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் திட்டம் பற்றி விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் வாழும் சிறுவர்களுக்கு இலங்கை நிதியுதவி!

  • April 1, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01.04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பலஸ்தீன அரசாங்கத்திடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது. இவ்வருடம் இப்தார் கொண்டாட்டத்தை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த நிதி சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக […]

இந்தியா

லக்னோ- மனைவி, 2 குழந்தைகள் கொலை: 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

  • April 1, 2024
  • 0 Comments

மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று அவர்களின் உடல்களோடு மூன்று நாட்களாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகான்(32). இவருக்கும் ஜோதி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பாயல்(6), ஆனந்த்(3) என்ற குழந்தைகள் இருந்தனர். மனைவியின் நடத்தையில் ராம் லகானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மனைவியின் செல்போனை கேட்டு ராம் லகான் […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 600 இஸ்ரேலிய துருப்புகள் உயிரிழப்பு!

  • April 1, 2024
  • 0 Comments

ஹமாஸ் போராளிக்குழுக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சண்டையில் இதுவரை 600 இஸ்ரேலிய துருப்புகள் உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. காசா பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 20 வயதான சிப்பாய் நடவ் கோஹன் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து மொத்த மரணங்கள் தொடர்பான அறிவித்தலை இராணுவம் வெளியிட்டுள்ளது.    

இலங்கை

திருகோணமலை – நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள்

  • April 1, 2024
  • 0 Comments

இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று (01) திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட குறித்த போராட்டத்தில் இதுவரை நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். திருகோணமலை அபயபுர சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டமானது நடை பவனியாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வரை சென்றிருந்தனிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் செயலாளரிடம் மஹஜர் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக கிழக்கு மாகாண ஆளுநர் […]

உலகம்

துருக்கி புதிய நேட்டோ தலைவரை ஆதரிக்குமா? வெளியான தகவல்

நேட்டோவின் புதிய தலைவராக இருக்கும் ஒரு வேட்பாளரை அதன் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அங்காரா ஆதரிக்கும் என்று துருக்கிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி அழைப்பில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கூட்டணியின் புதிய தலைவர், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நட்பு நாடுகளின் தேவைகள் மற்றும் நலன்களுக்கு சேவை செய்வார் என்றும், ஐரோப்பிய யூனியன் அல்லாத கூட்டாளிகளின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்வார் என்றும் துருக்கி எதிர்பார்க்கிறது […]

ஐரோப்பா

ரஷ்யாவின் தங்கச் சுரங்க விபத்தில் சிக்கியிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

  • April 1, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 13 பணியாளர்களும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,000 கிலோமீட்டர் (3,000 மைல்) தொலைவில் உள்ள அமுர் பிராந்தியத்தின் Zeysk மாவட்டத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 13 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் […]

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல்!

  • April 1, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் இருந்து இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் விலகுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சியின் இளைஞர் அமைப்புகளின் கோரிக்கைகள் நாமல் ராஜபக்ஷவிடம் […]

இலங்கை

விமல் வீரவன்சவுக்கு எதிரான கடவுச்சீட்டு வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கான விசா அடங்கிய காலாவதியான கடவுச்சீட்டை வழங்கியுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டின் நிலை குறித்து விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கைக்கு பாரிய அளவில் வருகை தரும் சுற்றுலா பயணிகள் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 1, 2024
  • 0 Comments

இந்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 209,181 ஆகும்.