ஆசியா செய்தி

முடியால் வந்த விபரீதம் – தென் கொரிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

  • April 11, 2024
  • 0 Comments

ஜின்ஜூவில் உள்ள கடை ஊழியர் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய நபருக்கு தென் கொரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குட்டை முடியால் தூண்டப்பட்ட இந்த தாக்குதல், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணியத்தின் அடையாளமாக கருதப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், கடைக்குள் நுழைந்த ஆண், அந்தப் பெண்ணை அடித்து உதைப்பது போல் இருந்தது. ”உனக்கு குட்டை முடி இருந்ததால, பெண்ணியவாதியா இருக்கணும். நான் ஒரு ஆண் பேரினவாதி, பெண்ணியவாதிகள் தாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று நான் […]

பொழுதுபோக்கு

“GOAT” விஜய் படமா இருந்தாலும்… பிரஷாந்த் பகிர்ந்த மற்றுமொரு குட் நியுஸ்

  • April 11, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக மைக் மோகன் இணைந்துள்ளதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கேரளா, ஹைதராபாத் என அடுத்தடுத்த […]

இலங்கை செய்தி

வாக்குச் சீட்டில்  மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயம் காணப்படும்!! நாமல் எம்.பி நம்பிக்கை

  • April 11, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில்  மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயம் காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை இன்று (11) பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதியின் பொதுச் சின்னம் மொட்டுவாகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடிற்கான அடிக்கல் […]

உலகம் செய்தி

ஈரானின் பகிரங்க எச்சரிக்கை!! அமெரிக்காவும், இஸ்ரேலும் பதற்றம்

  • April 11, 2024
  • 0 Comments

இராணுவ பயிற்சிக்காக தமது வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக சடுதியாக ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பெரும் பரபரப்புடன் அலேட்டாகி வருகின்றன. இஸ்ரேல் மீது ஏதோவொரு திடீர் தாக்குதலை முன்னெடுப்பதற்கான நகர்வாகவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் இதனை பார்க்கின்றன. ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பை இன்னும் உசுப்பேற்றி விடும்படியாக வடகொரிய தலைவர் கிம்ஜோன் உங்க் “இதுதான் யுத்தத்திற்கு பொருத்தமான சிறந்த தருணம்” என வெளியிட்ட அறிவிப்பால் அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி மத்தியகிழக்கு நாடுகளும் குழம்பிப்போய் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது

  • April 11, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்கவில் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். வரி செலுத்தாமல், சுங்கத்திற்கு அறிவிக்காமல்  பொருட்களை கொண்டு வந்தமை குறித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள் மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தடையின்றி தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை

  • April 11, 2024
  • 0 Comments

சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து,  போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளது. வினியோகஸ்தர்களின் எரிபொருள் ஆர்டர் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் […]

உலகம் செய்தி

உலகையே உலுக்கிய கோடீஸ்வரருக்கு மரண தண்டனை

  • April 11, 2024
  • 0 Comments

வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக கருதப்பட்டது. உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய வங்கி மோசடி தொடர்பான விசாரணை இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 67 வயதான ட்ரூங் மை லான், ஒரு பணக்கார பெண், சொத்து மேம்பாட்டு வணிகங்களை வைத்திருக்கிறார். அவர் […]

விளையாட்டு

IPL Match 25 – மும்பை அணி அதிரடி வெற்றி

  • April 11, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 […]

இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதாரம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய கணிப்பு

  • April 11, 2024
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியைக் காண்பிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான சுருக்கங்களுக்குப் பின்னர் இந்த நிலைமையைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, இந்த ஆண்டு இந்த நாட்டின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டியது, நெருக்கடி […]

இந்தியா செய்தி

பிரபல நடிகர் அருள்மணி காலமானார்

  • April 11, 2024
  • 0 Comments

பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார். அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்,  பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்துள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி. நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் […]