இலங்கை செய்தி

வாக்குச் சீட்டில்  மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயம் காணப்படும்!! நாமல் எம்.பி நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில்  மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயம் காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை இன்று (11) பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதியின் பொதுச் சின்னம் மொட்டுவாகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (10) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது அம்பாறை பகுதியில் உள்ள அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.இதனால் பலத்த சேதம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை