கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது
இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்கவில் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரி செலுத்தாமல், சுங்கத்திற்கு அறிவிக்காமல் பொருட்களை கொண்டு வந்தமை குறித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள் மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)