வட மாகாண ஆளுநர் குறித்து ஆசிரியர் தலையங்கம் எழுதிய பத்திரிகை ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணை
வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள முன்னணி தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் பொலிஸாருக்கு இரண்டரை மணித்தியாலங்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி வாக்குமூலம் வழங்கிய வடக்கில் வெளிவரும் நாளிதழான வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் தம்மை இவ்வாறு கேள்வி கேட்பது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். “வடமாகாண ஆளுநருக்கு ஒரு அவசர கடிதம்” என்ற […]













