ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் அறிவிக்கப்படும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித விவாதங்களும் இன்றி பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கங்களை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், […]













