மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்… பொலிஸார் அழுத்தியதில் மூச்சுத் திணறி கறுப்பினத்தவர் பலி!
அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18ம் திகதி கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் அந்த பாருக்குள் சென்று, விபத்தை ஏற்படுத்திய கார் […]













