பெண்கள் புறக்கணிப்பு – பாரிஸில் இந்துக் கோயிலால் வெடித்த சர்ச்சை
பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில் முதல் முறையாக இந்துக் கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி குழுவினரின் வருகையின்போது பாரிஸில் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஈபிள் கோபுர ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து BAPS அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளது.
கோபுரத்தை இயக்கும் நிறுவனமான SETE, “பெண்களுடனான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும்” வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று இந்துப் பிரதிநிதிகள் குழு கோரியதை ஒப்புக்கொண்டுள்ளதுடன், “இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடாது” என்றும் கூறியுள்ளது.
பாரிஸில் உள்ள BAPS இந்து கோயில், எழுப்பப்பட்ட கவலைகளை “மிகவும் தீவிரமாக” எடுத்துக்கொள்வதாகவும், “ஏற்பட்ட எந்தவொரு வேதனை அல்லது சிரமத்திற்கும்” மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்படும் என்று பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகோயர், குறிப்பிட்டுள்ளார்.




