பொழுதுபோக்கு

ப்பா.. என்ன நடிப்புடா சாமி.. கவின் நடித்துள்ள ’ஸ்டார்’ டிரெய்லரை பாருங்க…

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹங்கர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை வெளியேயான படங்களின் டிரெய்லர் கூட ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காமெடி படமாக வரும் நினைத்து பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு தரமான சம்பவத்தை கவின் கொடுக்க காத்திருக்கிறார் என்பதை டிரெய்லரை பார்த்தாலே தெரிந்து விடும்.

கடந்த ஆண்டு கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தொங்கிக் கிடக்கும் தமிழ் சினிமாவை கில்லி ரீ ரிலீஸுக்கு பிறகு கவினின் ஸ்டார் படம் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்