உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐ.நா. விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் UN Secretary-General Antonio Guterres அவசர கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மோதலால் ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகள் மற்றும் மக்களின் சொல்லொணாத் துயரங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, அமைதியை நிலைநாட்ட […]

ஐரோப்பா

தீப்பற்றும் அபாயம் – இங்கிலாந்தில் 44000 கார்களை திரும்பப் பெறும் நிறுவனம்!

  • April 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனம் சுமார் 44000 கார்களை மீளக் கோரியுள்ளது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் தீவிபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேசோலின் துகள் வடிகட்டிக் குழாய்க்கும் 48-வோல்ட் பெல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லாததே இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பிரச்சினையானது ஈரமான சூழ்நிலைகளில்,  இன்ஜின் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து, தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 மற்றும் […]

உலகம்

மனித சிறுநீரை பயன்படுத்தி மரம் வளர்ப்பு – ஆஸ்திரேலியாவில் புதிய திட்டம்!

  • April 2, 2026
  • 0 Comments

மனித சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தைப் பயன்படுத்தி 4,500 மரங்கள் வரை வளர்க்க விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இந்த திட்டம் ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் நகரில் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூலை மாதம் ஹாம்ப்ஷயரில் (Hampshire) நடந்த பூம்டவுன் (Boomtown’) திருவிழாவில் கலந்துகொண்ட 700 பேரிடமிருந்து சிறுநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டலைச் சேர்ந்த NPK ரெக்கவரி என்ற புத்தொழில் நிறுவனம் இந்த உரத்தைத் தயாரித்துள்ளது. வனத்துறை ஆணையத்திடமிருந்து கிடைத்த £435,627 மானியத்தின் ஆதரவுடன்  முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 03 ஆண்டுகாலத்தில் பயனை […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கை: வான்வெளியை பயன்படுத்த Austria தடை! அமெரிக்கா கொதிப்பு!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தமது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை Austria நிராகரித்துள்ளது. தமது நாட்டின் நடுநிலைத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றி ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்துள்ளதுடன், இத்தாலியும் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரியாவும் Austria இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் இந்த ராணுவ முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்க மறுப்பதையும், தன்னாட்சி முடிவுகளை […]

உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

  • April 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானின் தெற்கு பகுதிகளில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டிலுள்ள இடங்களை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்கள் மற்றும் கடற்கரைகளில் தற்காலிக கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தெற்கு லெபனானின் சில பகுதிகளில் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை உள்ளூர் மக்கள் மதிப்பிட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய தாக்குதல்களிலிருந்து, நாடு முழுவதும் பரவலாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். […]

ஐரோப்பா

கொள்ளையர்களின் கைவரிசை – 2500 ஆண்டுகள் பழமையான தங்க தலைக்கவசம் மீட்பு!

  • April 2, 2026
  • 0 Comments

2,500 ஆண்டுகள் பழமையான , விலைமதிப்பற்ற  ரோமானிய காலத்து தங்கத் தலைக்கவசம் இன்று  நெதர்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்டது. கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தலைக்கவசம் 2025-ஆம் ஆண்டில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையின் போது  திருடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டச்சு காவல்துறை அதிகாரி கோரியன் ஃபானர் (Corien Fahner), “கோட்டோஃபெனெஸ்டி (Cotofenesti ) தலைக்கவசமும் இரண்டு டேசியன் (Dacian) தங்கக் கைக்காப்புகளும் திரும்பக் கிடைத்துவிட்டன, இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: IMF குழுவுக்கு அநுர விளக்கம்!

  • April 2, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து […]

உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • April 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் IRGC மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை இன்று (2) நடத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் மேற்படி தாக்குதலில் ஈரானியப் படையினரின் தரைப்படை முகாம்கள், உயர் தளபதிகள் தங்கியிருந்த நடமாடும் தலைமையகம் மற்றும் ballistic ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. தற்போதைய […]

உலகம் செய்தி

இஸ்பஹான் ஏவுகணைத் தளத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள்

  • April 2, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்பஹான் நகர புறநகரில் அமைந்துள்ள முக்கிய ஏவுகணைத் தளத்திற்கு அருகில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மூன்று காணொளிகளை ஆய்வு செய்ததில், அந்தத் தளத்தின் தெற்கு பகுதியில் பெரிய புகைமூட்டமும் தீப்பரவலும் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தமை காணொளிகளில் பதிவானது. மற்றொரு காட்சியில், மலைப்பகுதிகளுக்கு மேல் புகை எழுவதையும் தொடர்ந்து பல இரண்டாம் நிலை வெடிப்புகளும் நிகழ்ந்ததையும் காண முடிகிறது. இது ஆரம்பத் தாக்குதலுக்கு பின்னர் […]

உலகம்

ஈரானில் ஏவுகணை உற்பத்தி மையங்கள் அழியவில்லை

  • April 2, 2026
  • 0 Comments

தங்களின் உண்மையான ராணுவ பலம் மற்றும் ஆயுதத் திறன்கள் குறித்து எதிரி நாடுகளுக்கு முழுமையான புரிதல் இல்லை என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கியமான ஏவுகணை உற்பத்தி மையங்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும், சமீபத்திய தாக்குதல்கள் தங்களுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை என்றும் ஈரான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் எதிரி நாடுகள் மீது மிகவும் கடுமையான மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.