உலகம் செய்தி

ராணுவ தளத்தை தாக்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது ராணுவ தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமீர்ஹொசைன் ஹதாமி Amirhossein Hatami என்ற குறித்த நபர், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியதோடு பாதுகாப்புப் படையினருக்கு எதிராகச் செயல்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இந்த […]

உலகம்

எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆஸ்திரேலியா தீவிரம்!

  • April 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese, எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். ஆஸ்திரேலியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத் தேவைகளில் பெரும்பகுதி சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளன. இது தொடர்பாக இரு […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

  • April 2, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , மனோ கணேசன் Mano Ganesan தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் Tamil Progressive Alliance (TPA) இடையிலான சந்திப்பு இன்று (2) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி […]

indonesia-protest-israel-death-penalty-law உலகம்

பாலஸ்தீனர்களை இலக்கு வைத்து மரண தண்டனை: இந்தோனேசியா எதிர்ப்பு!

  • April 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீனர்களை இலக்குவைத்து இஸ்ரேல் கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்தை இந்தோனேசிய அரசாங்கம் Indonesian government கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இஸ்ரேலிய யூதர்களுக்கு இன்றி பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கும் அணுகுமுறை நீதிக்கு எதிரானது என இந்தோனேசியா குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பாகுபாடு காட்டும் கொள்கை சர்வதேச மனித உரிமைகளை மதிக்காத செயல் என்றும் இது ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் வாழ்வுரிமைக்கான உலகளாவிய சட்டங்களை மீறும் செயல் எனவும் இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை

“தமிழ்க் கட்சிகள் ஓரணியில்” – அடுத்த வாரம் 2ஆவது சந்திப்பு!

  • April 2, 2026
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, சமஷ்டி முறையிலான அரசமைப்புக்கான சமூக […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’விண்கலம்!

  • April 2, 2026
  • 0 Comments

‘ஓரியன்’ விண்கலத்தை Orion Spacecraft வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது நாசா NASA. நிலவை ஆய்வு செய்யும் பணிக்காகவே இதற்குரிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ்  பதற்றம் – ஈரானை குற்றம் சுமத்தும் பிரித்தானியா

  • April 2, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டில், பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ஈரான் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையைத் தடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த காணொளி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. வளைகுடா கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கூட்டணியை அமைப்பதற்கான தொடக்கமாக இது கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பதிலடியாக ஈரான் பல கப்பல்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஜனநாயகன் படத்துக்கு எதிராக பெரும் சூழ்ச்சி – மக்களிடம் நீதி கோரும் விஜய்

  • April 2, 2026
  • 0 Comments

“என் கடைசி படமான ஜனநாயகன் வெளிவந்தால், மனதுக்கு நெருக்கமான சொந்த பந்தங்களான நாம், நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுவோம். நாம் நெருக்கமாகி தேர்தலில் மிகப் பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதற்காக ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும்தான் நீதி வேண்டும்” என திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆதங்கம் வெளியிட்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் […]

இலங்கை செய்தி

தேங்காய் எண்ணெயில் கலப்படம் – 05 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

  • April 2, 2026
  • 0 Comments

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட துடன், குற்றங்களுக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 01 மற்றும் 07 ஆம் திகதிகளுக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • April 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் IRGC மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை இன்று (2) நடத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் மேற்படி தாக்குதலில் ஈரானியப் படையினரின் தரைப்படை முகாம்கள், உயர் தளபதிகள் தங்கியிருந்த நடமாடும் தலைமையகம் மற்றும் ballistic ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. தற்போதைய […]