இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்தையடுத்து ஈரானில் நடப்பது என்ன?
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் 7 பேரின் இறுதி சடங்குகள் தொடங்கியுள்ளன. அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் நகரில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி […]













