இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
57 வயதான குறித்த சந்தேகநபர் சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 73.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பாகிஸ்தானிய பெண், தமது பயணப்பையில் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்