இலங்கை செய்தி

ஆனைவிழுந்தான் பகுதியில் மர்மமான முறையில் இறக்கும் பறவைகள், மீன்கள்

  • May 27, 2024
  • 0 Comments

ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான்  பறவைகள் சரணாலயம் மற்றும் அதன் நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் இறந்துள்ளன. கடந்த சில நாட்களாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்பகுதிகளில் புலம் பெயர்ந்த பறவைகள் கூட்டங்கள் சுதந்திரமாக வாழ்கின்றன. இந்த பகுதியில் ஒரு தொழிற்சாலை சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை கொட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் […]

இலங்கை செய்தி

ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் ஊடக மேலாளர் கோபிநாத் சிவராஜாவிற்கு விளக்கமறியல்

  • May 27, 2024
  • 0 Comments

வெளிநாட்டு பயணத்தடையை மீறி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் ஊடக முகாமையாளர் கோபிநாத் சிவராஜாவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலன கமகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில், கொழும்பு மோசடி விசாரணைப் […]

இந்தியா

பச்சிளங் குழந்தைகள் பலியான சம்பவம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

தில்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனர். . கிழக்கு தில்லி விவேக் விஹார்.- 1 இல் ’பேபி கோ் நியூ பாா்ன்’ என்கிற குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாடியில் செயல்படும் இந்த ’பேபி கோ் நியூ பாா்ன்’ மருத்துவ மனையில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் தீப்பிடிக்க அருகேயுள்ள மற்ற இரண்டு கட்டிடங்களுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. அப்போது மருத்துவா்கள் யாரும் இல்லை. […]

ஐரோப்பா செய்தி

தலிபான்களை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கும் ரஷ்யா

  • May 27, 2024
  • 0 Comments

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான்களை ரஷ்யா நீக்கும் என்று அரசு நடத்தும்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோ பல ஆண்டுகளாக தலிபான்களுடன் உறவுகளை வளர்த்து வருகிறது, பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, சர்வதேச தடைகளை மீறி ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகத்தை மேம்படுத்துகிறது. “பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து அவர்களை நீக்குவதற்கான முடிவை கஜகஸ்தான் சமீபத்தில் எடுத்துள்ளது, அதை நாங்களும் எடுக்கப் போகிறோம்,” என்று நோவோஸ்டி வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்தார். கஜகஸ்தான் 2023 ஆம் ஆண்டின் […]

செய்தி விளையாட்டு

திடீரென பயிற்சி போட்டிகளில் இருந்து விலகிய பட்லர்

  • May 27, 2024
  • 0 Comments

டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் […]

இலங்கை

இலங்கையில் handfreeயினால் பறிபோன உயிர்!

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு ரயில் வீதியில் பயணித்ததாக ரயில் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – 30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்!

  • May 27, 2024
  • 0 Comments

மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டுப்போகாது.மேலும், டேஸ்ட்டும் சூப்பராகவே இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் […]

ஆசியா

பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த மதக் கலவரம் : 100 இஸ்லாமியர்கள் கைது!

  • May 27, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் புனித குரானை அவமதித்தமையால் இரு கிருஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பில் ஏறக்குறைய 100 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும் புனித குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்ட இஸ்லாமியர்கள் அவர்களின் வீட்டிற்கு தீவைத்ததுடன், அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

ஆசியா

ரஃபாவில் பாலஸ்தீனியர்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: பிரான்ஸ் கண்டனம்

ரஃபாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தான் கோபமடைந்ததாக மக்ரோன் தெரிவித்துள்ளார். ரஃபாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். “இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன குடிமக்களுக்கு ரஃபாவில் பாதுகாப்பான பகுதிகள் இல்லை. சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு நான் அழைப்பு விடுக்கிறேன், ”என்று அவர் X இல் ஒரு ட்வீட் பதிவில் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இலங்கை – நாளைய தினம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான தொகைமதிப்பு நடவடிக்கை

  • May 27, 2024
  • 0 Comments

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தால் 11வது “அரசு மற்றும் அரசு சார்ந்த துறை வேலை வாய்ப்பு தொடர்பான தொகைமதிப்பு 2022/23” நாடுதழுவிய ரீதியில் ஒரே நாளில்2024ம் ஆண்டுக்கான தொகை மதிப்பு நாளை (28) நடைபெறவுள்ளதாக, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். மத்திய அரசாங்க நிறுவனங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள்,நியதிச்சட்டரீதியான சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள், அரச கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் மாகாண அரச துறையின் கீழ் இயங்கும் […]