ஐரோப்பா

நேட்டோ விவகாரம் – மாற்று பாதுகாப்பை தேடும் ஐரோப்பிய நாடுகள்!

  • April 7, 2026
  • 0 Comments

நேட்டோ கூட்டாளிகள் மீதான சமீபத்திய அமெரிக்கப் முறைப்பாடுகளும், கூட்டணியிலிருந்து விலகுவதாக விடுத்த அச்சுறுத்தல்களும், ஐரோப்பிய நாடுகளை மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேடத் தூண்டுகின்றன என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பெரெஸ் (Jose Manuel Albares) தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க தங்கள் கடற்படைகளை அனுப்ப ஐரோப்பிய நாடுகள் மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேட்டோ கூட்டணியிலிருந்து விலகுவது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவின் மறுப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் வெளியானது!

  • April 7, 2026
  • 0 Comments

ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் நிலவின் மறுபக்கத்திலிருந்து எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. நிலவின் மறுபக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்றும், ஓரியன் விண்கலத்திலிருந்து பூமி நிலவின் அடிவானத்திற்குக் கீழே மறைவதைப் படம்பிடித்த முதல் புகைப்படம் என்றும் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை எந்த மனிதனும் பயணித்திராத தொலைவிற்கு விண்வெளியில் பயணித்த பிறகு, ஆர்டெமிஸ் II குழுவினர் இப்போது பூமிக்குத் திரும்பி வருகின்றனர். திங்கள்கிழமை மாலை, பூமியிலிருந்து 252,756 மைல்கள் (406,771 […]

ஐரோப்பா

ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரெஞ்சு தம்பதியர் தாய்நாடு திரும்பினர்!

  • April 7, 2026
  • 0 Comments

“ஈரானில் மூன்றரை ஆண்டுகள் தடுப்புக்காவலில் இருந்த பிரெஞ்சு நாட்டவர்களான செசில் கோலர் (Cecile Kohler ) மற்றும் ஜாக் பாரிஸ் (Jacques Paris)  ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார். மேலும், அவர்களின் விடுதலைக்கு ஓமான் மத்தியஸ்தம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதியினர், உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2022 முதல் ஈரானின் எவின் சிறையில்  […]

செய்தி தமிழ்நாடு

விஜய் மனதில் பாஜக தான் – குஷ்பு

  • April 7, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியில் தவெக தனித்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமுவும், பாஜக சார்பில் செல்வமும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தத் தொகுதியில் ராமுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்கள்” என பேசினார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், இன்று புதுச்சேரியில் பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சித் தலைவர் குஷ்பு, […]

உலகம் செய்தி

ஈரானில் எட்டு பாலங்களில் இஸ்ரேல் தாக்குதல் – முக்கிய ரயில் பாதைகள் பாதிப்பு

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக கூறி, எட்டு முக்கிய பாலப்பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானின் பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பாலங்கள், குறிப்பாக தெஹ்ரான், கராஜ், தப்ரிஸ், காஷான் மற்றும் கோம் நகரங்களுக்கு அருகில் அமைந்திருந்ததாக IRGC தெரிவித்துள்ளது. இவை ரயில்கள் […]

ஐரோப்பா

ஈரான் போரில் ரோயல் ஏர் ஃபோர்ஸை பயன்படுத்த ட்ரம்ப் கோரிக்கை – பிரித்தானியா மறுப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

பாலங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்காக, ரோயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளங்களைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை பிரித்தானியா மறுத்துள்ளது. இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரான் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஈரானிய குடிமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என அச்சுறுத்தியுள்ளார். பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான இங்கிலாந்தின் ஒப்பந்தம், “பிராந்தியத்தின் கூட்டுத் தற்காப்பு” மற்றும் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை விளைவு -அமெரிக்க பங்குச் சந்தை சரிவு

  • April 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இறுதி காலவகாசம் நெருங்கியுள்ள நிலையில், ஈரான் – வொஷிங்டன் இடையேயான போர்நிறுத்த நம்பிக்கை மங்கியதால், அமெரிக்க பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவடைந்துள்ளன. S&P 500, Nasdaq Composite மற்றும் Dow Jones Industrial Average ஆகிய முக்கிய குறியீடுகள் அனைத்தும் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே கு றைந்த நிலையில் காணப்பட்டன. பின்னரும் இவை மேலும் சரிவடைந்தன. சந்தை திறந்த பின்னர் பெரும்பாலான துறைகள் இழப்பை சந்தித்தன. அதேவேளை, எரிசக்தி துறை மட்டும் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலையில் பாரிய வீழ்ச்சி – நகை வாங்க சரியான நேரமா?

  • April 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (07) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,652.23 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. அதேவேளை, வெள்ளியின் விலையும் சரிவடைந்து, ஒரு அவுண்ஸ் 71.77 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, பிராந்திய அரசியல் மாற்றங்கள் […]

உலகம்

காசா பகுதியை இராணுவமயமற்றதாக்குவதற்கான ஒப்பந்தம் – ஹமாஸுக்கு எச்சரிக்கை!

  • April 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரியம், காசா பகுதியை இராணுவமயமற்றதாக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த வார இறுதிக்குள் ஹமாஸ் இறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு தூதர்களை மேற்கோள் காட்டி மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி வலியுறுத்தலானது  பாலஸ்தீனியப் போராளிக் குழுவான ஹமாஸ் தனது அதிகாரத்தைக் கைவிடுவதற்கான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. காசாவில் ஆறு மாதங்களாக நீடித்து வரும் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பான அமைதி […]

இலங்கை செய்தி

2025 இல் வடக்கில் 1000 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) நாடாளுமன்றத்தில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் […]