உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் Masoud Pezeshkian கூறியுள்ளார். அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் சபாநாயகரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் செய்தி

பெய்ரூட்டில் சில பகுதிகளுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டில் சில தெற்கு பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் “இராணுவ உட்கட்டமைப்பை” தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக வெளியேறு” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தியாளர் அவிச்சாய் அத்ராயீ, மக்களுக்கு அறிவித்தார். வெளியேற்ற உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்ட பகுதிகள், ஹரத் ஹ்ரெய்க் கோபெய்ரி அல்-லிலாகி ஹதாத் போர்ஜ் அல்-பராஜினே தஹ்விதத் அல்-கதிர் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: எட்டப்படுமா தீர்வு?

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதன் ஓர் அங்கமாக கலந்துரையாடல் நடைபெறும் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • April 9, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கப்பெறவேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியினர் […]

ஐரோப்பா செய்தி

90 % கடலுக்கடியில் இணையப் போக்குவரத்து- பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு சவால்

  • April 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் இணையத் தரவு பரிமாற்றமும் ஆற்றல் விநியோகமும் பெருமளவில் கடலடிக் கேபிள்கள் மற்றும் குழாய்கள் மீது சார்ந்துள்ளது. நாட்டின் அன்றாட இணையப் போக்குவரத்தின் 90% க்கும் அதிகமானவை செயற்கைக்கோள் வழியாக அல்லாமல், இந்தக் கடலடிக் கேபிள்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆனால், இந்த அதிக சார்பு பாதுகாப்பு சவால்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட கடல் பகுதிகளில் இருந்து கரைக்கு வரும் கேபிள்கள் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றிணைவதால், அவை தாக்குதல்களுக்கு எளிதாகக் குறியாக மாறக்கூடும் என […]

இலங்கை செய்தி

கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி: வவுனியாவில் பயங்கரம்!!

  • April 9, 2026
  • 0 Comments

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் தனது சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண், சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்ற பெண்ணுக்கும், அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் நேற்று இரவு திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, மதுபோதையில் இருந்த மேற்படி நபர், ஆத்திரமடைந்து தனது சகோதரியைக் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் […]

இலங்கை செய்தி

கோட்டை ரயில் நிலையம் சர்வதேசத் தரத்திலான போக்குவரத்து மையமாக மாறுகிறது -மாபெரும் செயற்றிட்டம் ஆரம்பம்

  • April 9, 2026
  • 0 Comments

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் ஹரினி அமரசூரிய, “மேம்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பு இல்லாத ஒரு நாட்டை வளர்ந்த நாடாகக் கருத முடியாது” என தெரிவித்துள்ளார். ஆரம்ப விழாவில் உரையாற்றிய போதே அவர் இன்று இதனைக் கூறியுள்ளார். குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவைகளை வசதியாகப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார். கொழும்பு கோட்டை […]

இந்தியா செய்தி

போர் பதற்றம் – விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய சலுகை – விமான டிக்கெட் விலை குறையுமா?

  • April 9, 2026
  • 0 Comments

போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுசுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக IndiGo மற்றும் Air India போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்த எரிபொருள் விலை உயர்வால் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதன் விளைவாக விமான டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் சார்ந்த கூடுதல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விமான நிறுவனங்களின் நிதிச் […]

செய்தி

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் – சிவகங்கை மாவட்டத்திற்கு விஜய் நாளை விஜயம்

  • April 9, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்வதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04) அக்கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம் பகுதியில் தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தவெகவினர் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், தவெக தலைவர் […]

உலகம்

காலநிலை மாற்றம் : கேள்விக்குள்ளாகும் கடல் உயிரினங்களின் இருப்பு!

  • April 9, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தின் காரணமாக வரும் காலங்களில் பென்குயின்கள் அழியும் நிலை ஏற்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நிலை அபாயகரமான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் கிரில் (krill ) எனப்படும் சிறு கடல் உயிரினங்களின் இருப்பு குறைந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, புதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பென்குயின்களைப்போல் அண்டார்டிக் உரோமக் கடல் நாய்களின் நிலையும் அக்கறை’ நிலையிலிருந்து ‘அபாயகரமான’ நிலைக்கு […]