உலகம் செய்தி

‘போர் நிறுத்தத்துக்குள் புகுந்த சீனா’ – நீடித்த அமைதி வேண்டுமென வலியுறுத்து!

  • April 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் இந்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்த வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் மோதல்கள் நீங்கி இயல்பு நிலை திரும்புவதை சீனா எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய போரை முற்றிலுமாக நிறுத்தி, நீடித்த அமைதியை […]

பொழுதுபோக்கு

ஆகாய மார்க்கமாக ப்ரோமோஷன்!

  • April 9, 2026
  • 0 Comments

‘LIK’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரை மற்றும் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

உலகம்

லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் 10 நிமிடங்களுக்குள் லெபனான் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

இலங்கை செய்தி

அன்னை பூபதி நினைவு ஊர்தி நல்லூரில் இருந்து ஆரம்பம்!

  • April 9, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று (9) நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்தி வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 1932 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் […]

இலங்கை செய்தி

கியூபாவுக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை!

  • April 9, 2026
  • 0 Comments

கியூபாமீது அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கையில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக வவுனியா, இலுப்பையடியில் இன்று (09) பொது மக்களிடம் கையொப்பம் திரட்டப்பட்டது. கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கமும், சமூக வெகுஜன அமைப்பும் இணைந்தே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றன. இதன்போது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

உலகம் செய்தி

தெஹ்ரானில் தூதரகத்தை மீள திறக்கிறது ஸ்பெயின்!

  • April 9, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மீண்டும் திறக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel Alvarez ,தமது நாட்டு தூதுவரை ஈரான் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அமைதியை நிலைநாட்ட அனைத்து முனைகளிலும் செயல்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் ஈரானிய தலைநகரிலிருந்தே அமைதி பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்கேற்க ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு தனது வான்பரப்பை பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் அனுமதி […]

ஐரோப்பா

எரிபொருள் நெருக்கடி : பிரித்தானியாவின் புதிய முயற்சி!

  • April 9, 2026
  • 0 Comments

சிஸ்வெல் சி அணுமின் (Sizewell C nuclear) நிலையம் மற்றும் லைட்ஹவுஸ் கிரீன் ஃபியூயல்ஸ் (Green Fuels sustainable aviation fuel (SAF) ) நிலையான விமான எரிபொருள் (SAF) ஆலை ஆகியவற்றுக்கான திட்டமிடல் ஒப்புதல்களை விரைவுபடுத்துவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் முகமை “முன்னணி சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பாக” நியமிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், ஒற்றைத் தொடர்புப் புள்ளியாகச் செயல்பட்டு ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்துவதாகும். சிஸ்வெல் சி, (Sizewell C)  ஆறு […]

உலகம் செய்தி

லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் லெபனான் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என பாகிஸ்தான் தரப்பு வாதிட்டாலும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஈரான்மீதான […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: பாகிஸ்தான் விரைகிறது ஈரான் தூதுக்குழு!

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது என தெரியவருகினறது. ஈரான் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் தூதுக்குழுவுக்கு அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகின்றது. ஈரானால் முன்வைக்கப்பட்ட பத்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் கலந்துரையாடல் அமையும் என பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்நிறுத்த விதி மீறல்கள் இந்த இராஜதந்திர முயற்சியைச் சிதைக்கக்கூடும் என ஈரான் தரப்பில் சந்தேகம் […]

உலகம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

  • April 9, 2026
  • 0 Comments

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுக்கு ( Sher Bahadur Deuba) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய அரசாங்கத்தின் கீழ் குறிவைக்கப்பட்ட சமீபத்திய முக்கிய பிரமுகராக அவர் ஆகியுள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கும் 79 வயதான தேவுபா, ” ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.