ஆங்கில கால்வாயில் பெரும் துயரம் – அகதிகளை ஏற்றிய படகு விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழப்பு
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையிலான ஆங்கில கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நால்வர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் ‘டாக்ஸி-போட்’ (Taxi-boat) வகை படகு விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஈக்விஹென்-பிளாஜ் மற்றும் ஹார்டெலோட்-பிளாஜ் (Equihen-Plage and Hardelot-Plage) இடையே உள்ள பூலோன் கடற்கரைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், குறைந்தது 42 பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய படகில் ஏற முயன்றபோது, […]













