உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: எட்டப்படுமா தீர்வு?

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஓர் அங்கமாக கலந்துரையாடல் நடைபெறும் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது.

எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பல சவால்கள் இருந்தாலும் இரு தரப்பு சந்திப்பு ஒரு நல்லதொரு தீர்வை வழங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை மறுதினம் மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி