உலகம் செய்தி

லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு: தலைதூக்கும் மனிதாபிமான நெருக்கடி!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளுக்குரிய நிதிய ஐக்கிய நாடுகள் சபை தற்போது வழங்கி வருகிறது. எனினும், இந்த உயிர் காக்கும் […]

உலகம்

ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் நிபுணத்துவம் – உதவிக் கரம் நீட்டும் உக்ரைன்!

  • April 10, 2026
  • 0 Comments

ஈரான் வடிவமைத்த ஷாஹெட் ஆளில்லா விமானங்களை உக்ரேனியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஈரானுடனான மோதலில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு  உக்ரைன் உதவி வருவது இதன் மூலம் பகிரங்கமாகியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா இந்த ஆயுதங்களை பயன்படுத்திய நிலையில் அதனை உக்ரைன் வெற்றிகரமாக கையாண்டுள்ளது. இந்த நுட்பம் தற்போது மத்திய கிழக்கில் ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த கூட்டாளிகளுக்கு உதவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி கூட்டாளிகளுக்கு உதவி வழங்கும் […]

உலகம் செய்தி

” எரிசக்தி பாதுகாப்பு” – ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கம்!

  • April 10, 2026
  • 0 Comments

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய எரிபொருள் மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்பட இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் சிங்கப்பூர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதேபோல சிங்கப்பூருக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை (LNG) ஆஸ்திரேலியா பெருமளவில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் […]

இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா!

  • April 10, 2026
  • 0 Comments

தமது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா Yashwant Verma , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம்மூலம் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதன்போத அவர் வீட்டில் இருக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் தீயை […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை திறப்பு: இந்திய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

  • April 10, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. மேற்காசிய போரால்; உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பான் அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.

ஐரோப்பா

எரிபொருள் விலையேற்றம் – அயர்லாந்தில் தொடர் போராட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

அயர்லாந்தில் சரக்கு  வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாய ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் கடுமையான பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய எரிபொருள் கிடங்குகளுக்கு எதிராக மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது நான்காவது நாளாகத் தொடரும் இந்த பரவலான போராட்டம், நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. டப்ளின் (Dublin) தெருக்களில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன் தொடங்கிய போராட்டங்கள், தற்போது கோர்க் கவுன்டியில் (Co Cork) உள்ள வைட்கேட்டில் (Whitegate) […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருக்கு பறக்கும் ‘அழைப்புகள்’: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர முயற்சியைப் பாராட்டும் வகையில் துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாளை சனிக்கிழமை தொடங்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் […]

ஐரோப்பா

ஆங்கிலக்கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல் – வேடிக்கை பார்த்த ரோயல் கடற்படை!

  • April 10, 2026
  • 0 Comments

ரஷ்ய எண்ணெய்க் கப்பல்களை இடைமறிக்க ரோயல் கடற்படையை அனுப்ப பிரித்தானிய கடற்படை தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளாடிமிர் புட்டினின் நிழல் கடற்படையை “இன்னும் கடுமையாகத் தாக்குவோம்” என்று சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்த போதிலும்,  ஆங்கிலக்கால்வாயில் பயணித்த ரஷ்ய கப்பலலை இடைமறிக்க பிரித்தானியா தவறியுள்ளது. ரஷ்ய எண்ணெய் அதன் நட்பு நாடுகளைச் சென்றடைவதைத் தடுக்கும் வகையில், ஆங்கிலாக்கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்களை தடுக்க ரோயல் கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி உக்ரைனுக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலிருந்து ட்ரம்புக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரிட்டன் பிரதமர்: நடந்தது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

பிரிட்டன் பிரதமரின் Keir Starmer வளைகுடா நாடுகளுக்கான விஜயமானது முக்கியமானதொரு இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகின்றது. முதலில் சவுதி அரேபியாவுக்கு சென்ற Keir Starmer , அந்நாட்டில் முக்கியத்துமிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அதன்பின்னர் நேற்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மேற்படி நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறப்பதற்கான முக்கியத்துவம் குறித்து நாட்டுத் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் ஆலோசனை […]