விளையாட்டு

வெற்றிநடைபோடும் Rajasthan Royals!

  • April 11, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 16 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் தலைவர் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு Royal Challengers Bengaluru அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பில் சால்ட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி (32) நிதானமாக ஆட முயன்ற போதிலும், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 94 ஓட்டங்களுக்கு […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை வெகுவிரைவில் திறக்கப்படும்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதியை Strait of Hormuz வெகு விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானில் இன்று (11) இடம்பெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் பணி சவாலானது என்றாலும், ஈரான் ஒத்துழைக்காத பட்சத்திலும் அமெரிக்கா தனித்துச் செயல்பட்டு அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி […]

உலகம் செய்தி

ஒட்டுமொத்த உலகையும் திருப்பிபார்க்க வைத்த ஈரான் சபாநாயகரின் X பதிவு!

  • April 11, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக இஸ்லாமாபாத் வருவதற்கு முன்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பதிவிட்ட எக்ஸ் பதிவானது உலகின் கவனர்த்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்ட படமும், அதற்கு வழங்கிய தலைப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. ஈரான் மினாப் நகரில் பாடசாலைமீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 168 மாணவர்கள் பலியானார்கள். ஈரான் பேச்சுக்குழு பயணித்த விமானத்தில் முன் இருக்கையில் உயிரிழந்த மாணவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் துயரத்தையும் அதன் தூதரக முயற்சிகளையும் உலகுக்கு அடையாளப்படுத்துகிறது. […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு இன்று: 71 பேரடங்கிய உயர்மட்ட குழுவை களமிறக்கியது ஈரான்!

  • April 11, 2026
  • 0 Comments

  ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் Mohammed-Baqer Qalibaf தலைமையில் 71 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கவுள்ள ஈரான் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் போன்ற மிக முக்கியமான தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். நிபுணத்துவ ஆலோசகர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய இந்த விரிவான […]

உலகம்

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

  • April 11, 2026
  • 0 Comments

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 10 நாட்கள் கொண்ட இந்த விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து, ஒராயன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6 […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

  • April 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொள்ளவதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா இடையில் 32 மணிநேர போர் நிறுத்தம் அறிவிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 32 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி வரவேற்றதோடு, உக்ரைன் அதற்கேற்ப செயல்படும் என்றும் கூறியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான ஒப்பந்தத்தை நோக்கி உக்ரைனும் ரஷ்யாவும் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் சிறப்புத் தூதர், அமெரிக்காவில் உள்ள டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  

உலகம் செய்தி

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் –  ட்ரம்ப் எச்சரிக்கை

  • April 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை எட்டத் தவறினால், ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீண்டும் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகச் சிறந்த ஆயுதங்கள் ஏற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். “உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த ஆயுதங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

உலகம் செய்தி

லெபனான் போர்நிறுத்தம் -அமெரிக்கா உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 10, 2026
  • 0 Comments

லெபனான் மீதான போர்நிறுத்த உறுதிமொழிகளை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். லெபனானையும் போர்நிறுத்தம் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வது உட்பட, அமெரிக்கா தனது போர்நிறுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறுகிறார். லெபனானுக்கான ஈரானின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முகமது ரெசா ஷிபானியுடன் தொலைபேசியில் பேசியபோது அராக்சி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்தார். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இந்தத் தாக்குதல்கள் […]

இந்தியா

யமுனை ஆற்றில் கவிழ்ந்த படகு: 9 பேர் பலி

  • April 10, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் 20 இற்கும் அதிகமானோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.