உலகம் செய்தி

அமைதி பேச்சு இன்று: 71 பேரடங்கிய உயர்மட்ட குழுவை களமிறக்கியது ஈரான்!

 

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் Mohammed-Baqer Qalibaf தலைமையில் 71 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறுகின்றது.

இதில் பங்கேற்கவுள்ள ஈரான் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் போன்ற மிக முக்கியமான தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நிபுணத்துவ ஆலோசகர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய இந்த விரிவான குழு இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே இருவார கால தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் அமெரிக்காவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி