உலகம் செய்தி

அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்த லெபனான் பிரதமர்

  • April 11, 2026
  • 0 Comments

லெபனானின் தற்போதைய உள்நாட்டு நிலையை கருத்திற்கொண்டு, தனது அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக பிரதமர் நவாஃப் சலாம் அறிவித்துள்ளார். அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது. இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய லெபனான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபத்லல்லா, லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தைகளை அந்த அமைப்பு நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தேசிய ஒப்பந்தம், அரசியலமைப்பு மற்றும் […]

இலங்கை செய்தி

விபத்தில் கணவன் பலி: மனைவி படுகாயம்! திருமலையில் சோகம்!!

  • April 11, 2026
  • 0 Comments

திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலியாகியுள்ளார். மனைவி படுகாயம் அடைந்துள்ளார். இவ்விபத்து இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி, நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மனைவி கே யூ. அனுஷ்கா (46 வயது) படுகாயம் […]

ஐரோப்பா

சமூக ஊடக தடை : இங்கிலாந்தில் புதிய கணக்கெடுப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான ஒரு ஆய்வை இங்கிலாந்து அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சமூக ஊடகத் தடை குறித்த ஒரு மாதிரிச் சோதனையையும் நடத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்து கணிப்பு  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் இணைய தனியுரிமையில் குழந்தைகளின் பெயர்கள், உண்மையான வயதுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடம் ஆகியவை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில்,  4 பெற்றோரில் 3 பேர், தங்கள் பிள்ளைகளால் இணையத்தில் பாதுகாப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைவர் மாசூமே எப்தேக்கரின் Masoumeh Ebtekar உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio ரத்து செய்துள்ளார். இதற்கமைய எப்தேக்கரின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் தகுதியை இழந்து நாடுகடத்தப்படுவதற்காகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானியப் பிரமுகர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்குவதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, […]

வாழ்வியல்

மாடித் தோட்டம் செழிக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ் – ஆரஞ்சு தோல் மேஜிக்!

  • April 11, 2026
  • 0 Comments

தற்போது மக்களிடையே வீட்டுத் தோட்டம் மற்றும் மடித்தோட்டம் செய்வது ஒரு பொழுது போக்காக மாறிவருகிறது. வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது செடிகளைத் தாக்கும் பூச்சிகள்தான். தோட்டம் உள்ளவர்கள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் அன்றாடம் சாப்பிட்டுத் தூக்கி எறியும் ஆரஞ்சு பழத்தோல்கள் ஒரு சிறந்த இயற்கை அரணாகச் செயல்படுகின்றன. அதாவது ஆரஞ்சுத் தோல்களில் லிமோனீன் (Limonene) என்ற இயற்கையான எண்ணெய் உள்ளது. இதன் வாசனை மற்றும் வேதிப்பண்பு பல […]

ஐரோப்பா

இளவரசர் ஹாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

  • April 11, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி  தனது தாயார்  டயானாவின் நினைவாகத் தான் இணைந்து நிறுவிய சென்டெபேல் (Sentebale) என்ற தொண்டு நிறுவனம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இளவரசர் ஹாரி மீது அந்தத் தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அவர் ஒரு “பாதகமான ஊடகப் பிரச்சாரத்தை” திட்டமிட்டு நடத்தியதாகவும், அது அந்த நிறுவனத்தின் “செயல்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சென்டெபேலின் முன்னாள் அறங்காவலரான மார்க் டயரும் (Mark Dyer)  இந்த சட்ட நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் […]

உலகம் செய்தி

24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது தாக்குதல்!

  • April 11, 2026
  • 0 Comments

லெபனானில் ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், ஏவுகணைத் தளங்களை அழிக்கும் நோக்கோடும் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல்களில் தெற்கு லெபனானில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சில், லெபனானில் முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைதி பேச்சு நடைபெறும் நாளில் […]

உலகம் செய்தி

இராணுவம் மற்றும் அரசியல் என இரு முனைகளிலும் கடும் அழுத்தத்தில் இஸ்ரேல்

  • April 11, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும், பெய்ரூட் மீதான தாக்குதலை நிறுத்தவும், லெபனான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மூலம் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, லெபனான் அரசாங்கம் இந்த நெருக்கடியை ஈரான் மூலம் அல்லாமல் நேரடியாக இஸ்ரேலுடன் பேசித் தீர்க்க வேண்டுமென விரும்பியதால், ஒரு இஸ்ரேலிய பிரதிநிதியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. ஆரம்ப கட்ட சந்திப்பில் முக்கியமான தீர்வுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை எனவும், இரு தரப்பும் மிக வேறுபட்ட […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கப்பல்கள் கடக்கவில்லை – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்

  • April 11, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை எந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பலும் கடக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்தப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் இயக்கப்படவில்லையென ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் IRIB இதற்கு முன், அமெரிக்க அதிகாரி ஒருவர் பல கடற்படைக் கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்ததாக கூறியதாக அமெரிக்க ஊடகம் Axios செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். […]

இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி

  • April 11, 2026
  • 0 Comments

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோரிடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன. இந்தச் சந்திப்பின் போது, கடற்தொழில் துறையில் புதிய முதலீடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கூட்டு உற்பத்தி முயற்சிகள், பெறுமதி சேர்க்கப்பட்ட […]