உலகம்

ஈரானை இலகுவாக எடைபோட்ட ட்ரம்ப் – திணறும் அமெரிக்கா!

  • April 12, 2026
  • 0 Comments

வொஷிங்டன் நம்பியது போல் ஈரானின் ஆட்சியை மாற்றுவது சாத்தியமில்லை என்று சர்வதேச ஆய்வுகள் பேராசிரியரான ஹுசைன் (Hussein Banai) கருத்து வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் ஆறாவது வாரத்தில் நுழைந்துள்ளது. நிலையற்ற போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் நோக்கில், அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்கள் பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில் போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ மேஜர் மைக் லயன்ஸ் (Mike Lyons) இதனை பாரிய […]

ஐரோப்பா

லண்டனில் பரபரப்பு : பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கைது!

  • April 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலஸ்தீன அமைப்பிற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். டிரஃபால்கர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுக்கூடி போரட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். நான் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பை ஆதரிக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி தரையில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை கண்காணிக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியில் இருந்தனர். அவர்கள் பெண்கள் முதியவர் உட்பட பல நபர்களளை வெளியே அழைத்துச் சென்று கைது செய்தனர். இந்தக் கைதுகளுக்கு எதிர்வினையாற்றிய போராட்டக்காரர்கள், அதிகாரிகளைப் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மாறும் பணிச்சூழல் – தொலைதூரப் பணி தொடர்பான முறைப்பாடுகள் குறைவு

  • April 12, 2026
  • 0 Comments

கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டதிலிருந்து முதன்முறையாக, கிரேட் பிரிட்டனில் தொலைதூரப் பணி தொடர்பாக முதலாளிகளுக்கு எதிராக வேலைவாய்ப்புத் தீர்ப்பாயங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவுகள் இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு சந்தை இறுக்கமடைந்துள்ளதால், பல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகத் தயங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. மனிதவள ஆலோசகர்களான Hamilton Nash மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் தொலைதூரப் பணியை மையமாகக் கொண்டு […]

உலகம் செய்தி

ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – புதிய அறிக்கை வெளியீடு

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மேற்கொண்டதிலிருந்து, ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 3,375 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்களும், 496 பேர் பெண்களும் அடங்குகின்றனர். மேலும், தெஹ்ரான், ஹோர்மோஸ்கான் மற்றும் இஸ்ஃபஹான் மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அதில் […]

இலங்கை செய்தி

சூட்சுமமாக உடலில் போதைப்பொருளை மறைத்த பெண் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது

  • April 12, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து , கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, பின்னர் கட்டாரிலிருந்து இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக […]

செய்தி தமிழ்நாடு

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் – கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்

  • April 12, 2026
  • 0 Comments

தனது ஆட்சியில் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என தெரிவித்த விஜய் இலஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்றடையும் எனவும் கூறினார். அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும் என்றும் 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை […]

இலங்கை செய்தி

நிலக்கரி பிரச்சினைகள் கட்டணப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை – PUCSL

  • April 12, 2026
  • 0 Comments

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி […]

இலங்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி – 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

  • April 12, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, விசைப்படகொன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இவர்கள் யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் […]

இந்தியா பொழுதுபோக்கு

இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

  • April 12, 2026
  • 0 Comments

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி உலகப் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே, இந்திய இசைத்துறையின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.  

விளையாட்டு

IPL இல் பங்கேற்க தயாராகும் மதீஷ பத்திரண

  • April 12, 2026
  • 0 Comments

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார். அதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் நோக்கில் அவர் மிக விரைவில் இந்தியா புறப்படவுள்ளார். இதற்கமைய, அவர் இந்த ஆண்டு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.