உலகம்

ஓர்பனின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக தகவல்!

  • April 27, 2026
  • 0 Comments

ஹங்கேரி பிரதமர் விகடர் ஓர்பனின் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஓர்பனின் 16 ஆண்டு கால ஆட்சியில் செல்வம் பெருகியவர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஓர்பானுக்கு நெருக்கமான உயர் மட்டப் பிரமுகர்கள், தற்போது அமெரிக்காவில் குடிபெயர விசா தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓர்பன் 2010 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருக்கு நெருங்கிய கூட்டாளிகள் ஐரோப்பிய […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் 

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

லெபனான் விவகாரத்தில் ட்ரம்பின் உத்தரவுக்கு அடங்காத நெதன்யாகு!

  • April 27, 2026
  • 0 Comments

லெபனானுடன் போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் பிரதமர் மீறுகின்றார் என லெபனான் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நெதன்யாகு தன்னிச்சையாகச் செயல்படுவதாக அரசியல் ஆய்வாளர் Emma Shortis சுட்டிக்காட்டியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தங்கள் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சர்வதேச […]

ஐரோப்பா

ரியான்ஏர் விமான நிறுவனத்தின் அதிரடி முடிவு – சேவைகளை குறைக்க திட்டம்!

  • April 27, 2026
  • 0 Comments

ரியான்ஏர் (Ryanair) நிறுவனம் தனது பெர்லின் செயல்பாட்டுத் தளத்தை மூடவும், ஜெர்மன் தலைநகருக்கான தனது குளிர்கால விமானச் சேவைகளை பாதியாகக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. நாட்டில் கடுமையாக உயர்ந்து வரும் விமானப் போக்குவரத்து வரிகள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழு விமானங்களை மற்ற மையங்களுக்கு இடமாற்றம் செய்வதால், பெர்லினில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4.5 மில்லியனிலிருந்து 2.2 மில்லியனாகக் குறையும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலைமை நிர்வாகி […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி முன்னெடுப்பு!

  • April 27, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று திங்கள்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார […]

இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பி. கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்!

  • April 27, 2026
  • 0 Comments

கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்படி காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை […]

உலகம் செய்தி

புடினை சந்திக்கிறார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 27, 2026
  • 0 Comments

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைVladimir Putin , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பு பெரும்பாலும் இன்று நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையே நிலவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தவும், முக்கிய […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி சிறுமி கடத்தல்!

  • April 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் Alice Springs பகுதியில் பூர்வக்குடி முகாமில் இருந்து ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று Northern Territory காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நேற்றிரவு முதல் காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஷரோன் கிரானைட்ஸ் என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவரைத் தேடி வரும் […]

உலகம்

ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ – திணறும் தீயணைப்பு படையினர்!

  • April 27, 2026
  • 0 Comments

தென்கிழக்கு ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயினால்  87 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பெரும் காட்டுத்தீ பரவி வருவதாகவும், அதில் 7 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேநேரம் மக்கள் மேற்படி காட்டுத்தீயில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 20 அன்று மின்கம்பிகள் மோதியதால் ஏற்பட்ட காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி 31 சதுர மைல்களுக்கு மேல் பரவியுள்ளது. மணிக்கு 15 மைல் […]