உலகம் செய்தி

புடினை சந்திக்கிறார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைVladimir Putin , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இச்சந்திப்பு பெரும்பாலும் இன்று நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையே நிலவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தவும், முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தச் சந்திப்பு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என ஈரான் நம்புகின்றது.

அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் முயற்சிகளும் வெற்றியளிப்பதாக இல்லை.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி