ரியான்ஏர் விமான நிறுவனத்தின் அதிரடி முடிவு – சேவைகளை குறைக்க திட்டம்!
ரியான்ஏர் (Ryanair) நிறுவனம் தனது பெர்லின் செயல்பாட்டுத் தளத்தை மூடவும், ஜெர்மன் தலைநகருக்கான தனது குளிர்கால விமானச் சேவைகளை பாதியாகக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் கடுமையாக உயர்ந்து வரும் விமானப் போக்குவரத்து வரிகள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழு விமானங்களை மற்ற மையங்களுக்கு இடமாற்றம் செய்வதால், பெர்லினில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4.5 மில்லியனிலிருந்து 2.2 மில்லியனாகக் குறையும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலைமை நிர்வாகி எடி வில்சன் (Eddie Wilson), ஜெர்மன் விமானப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. அது போட்டித்தன்மையற்றது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
ஆனாலும் விமானப் போக்குவரத்து வரிகளையோ அல்லது அதிக விமான நிலையக் கட்டணங்களையோ குறைப்பதற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை – ஜெர்மனி போக்குவரத்து, இணைப்பு, வேலைகள் மற்றும் வர்த்தகத்தை இழக்கும் என்று ரியான்ஏர் எச்சரித்த போதிலும் இது நிகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளுடன் போராடி வரும் விமானத் துறை கொந்தளிப்பில் இருக்கும் நேரத்தில் இந்த விலகல் அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





