உலகம்

ஓர்பனின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக தகவல்!

ஹங்கேரி பிரதமர் விகடர் ஓர்பனின் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஓர்பனின் 16 ஆண்டு கால ஆட்சியில் செல்வம் பெருகியவர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஓர்பானுக்கு நெருக்கமான உயர் மட்டப் பிரமுகர்கள், தற்போது அமெரிக்காவில் குடிபெயர விசா தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓர்பன் 2010 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருக்கு நெருங்கிய கூட்டாளிகள் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி ஒப்பந்தங்கள் காரணமாக பெரும் செல்வத்தை குவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பிறகு, இந்த உள்வட்டத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளதாக கார்டியன் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தச் செல்வம் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் மற்றவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் மீது தங்கள் பார்வையைச் செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியான டிஸ்ஸாவின் தலைவர் பீட்டர் மாக்யார் (Péter Magya), மே மாத தொடக்கத்தில் தனது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஃபிடெஸ்(Fidesz) கட்சியுடன் தொடர்புடையவர்கள் தங்கள் செல்வத்தைப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்க விரைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு’ ஹங்கேரியின் தலைமை வழக்கறிஞர், காவல்துறைத் தலைவர் மற்றும் வரி அலுவலகத் தலைவருக்கு பீட்டர் மாக்யார் அழைப்பு விடுத்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!