உலகம்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு – வெனிசுலாவிற்கு ஜாக்பொட்!

  • May 3, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் காட்டியுள்ளது. அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 101.9 அமெரிக்க டொலராகவும், ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 108.2 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. மேலும், ஒரு பேரல் மர்பான் கச்சா எண்ணெயின் விலை 103.8 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் […]

ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் இளைஞர்!

  • May 3, 2026
  • 0 Comments

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்  மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ஹார்பர் (Coldharbour) லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

செய்தி விளையாட்டு

சென்னை அணி அபார வெற்றி!

  • May 3, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது. 160 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11) விரைவில் வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஓட்டோ டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லீற்றரொன்றின் புதிய விலை 392 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சூப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றரொன்றின் புதிய விலையாக 458 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 265 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக […]

உலகம்

பிரேசிலில் கனமழை – 06 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

பிரேசிலில் கனமழை காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் பெர்னம்புகோ (Pernambuco) மற்றும் பராய்பா (Paraiba)  மாநிலங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன்காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பெர்னம்புகோவில், மாநிலத் தலைநகரான ரெசிஃபே மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  10 ரூபாய் உயர்த்தப்பட்டு,  392 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை  15 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை  458  ரூபாயாகும். ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  470 […]

இலங்கை

இலங்கை வரும் ரஷ்ய தூதுக் குழுவினர்!

  • May 2, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ (Mikhail Murashko)  உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (03) நாட்டிற்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ​​ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து,  அமைச்சர்  நலிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலையும்  நடத்த உள்ளனர். இந்தத் தூதுக்குழுவினர், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்   விஜயத ஹெரத்தை சந்திக்க உள்ளனர். மேலும்,  மே 04 அன்று […]

ஐரோப்பா

பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா : இருவர் பலி!

  • May 2, 2026
  • 0 Comments

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனில் பேருந்தொன்றின் மீது ரஷ்யா இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுப் பயன்பாட்டுத் துறை ஊழியர்கள் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ப்ரோகுடின் (Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார். உடைந்த ஜன்னல்களுடன் பேருந்தையும், அதன் தரையில் இரத்தக் கறைகளுடன் கிடந்த ஒரு உடலையும் காட்டும் படங்களை அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். இதேவேளை “இத்தகைய தாக்குதல்கள், பொதுமக்களுக்கு […]

இலங்கை செய்தி

திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?

  • May 2, 2026
  • 0 Comments

திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. குறிப்பாக திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையிலேயே தேசிய மக்களின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் […]

உலகம்

ட்ரம்பிற்கு எதிராக கூச்சலிடப்படும் எண்கள் – பின்னணி என்ன?

  • May 2, 2026
  • 0 Comments

விமானப்படை முன்னாள் வீரரும், புளோரிடாவின் 16வது மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளருமான மார்க் டேவிஸ், தனது பிரச்சாரத்தில் “8647” என்ற சொற்றொடரின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். “8647” என்ற எண்கள், அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் ஒரு பேரணி முழக்கமாக உருவெடுத்துள்ளன. இதில் “86” என்பது பொதுவாக ஒன்றை அகற்றுவதையும், “47” என்பது டிரம்பின் அதிபர் எண்ணையும் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. “86 47” இடம்பெற்ற இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ஜேம்ஸ் கோமி ( James Comey) மீது நீதித்துறை […]