இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஓட்டோ டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லீற்றரொன்றின் புதிய விலை 392 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றரொன்றின் புதிய விலையாக 458 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 265 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு,   புதிய விலையாக 410 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு  புதிய விலையாக 470 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்காசிய போர்ச்சூழல், ஹார்முஸ் நீரிணை மூடல் உள்ளிட்ட காரணங்களால் தெற்காசியாவில் பல நாடுகளில் தொடர் விலையேற்றம் இடம்பெற்றுவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!