ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் மேலும் ஐந்து உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்

  • May 9, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் அனைத்து முடிவுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில், 136 உள்ளூராட்சிகளில் 131 பகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக வேண்டியுள்ள ஐந்து உள்ளூராட்சிகளின் முடிவுகள் பிராட்போர்டு, க்ராய்டன், லேம்பெத், லூயிஷாம் மற்றும் டவர் ஹாம்லெட்ஸ் பகுதிகளுக்கானவையாகும். இந்த முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

புதிய ஆலோசகர்களாக கோர்டன் பிரவுன், ஹாரியட் ஹார்மன் நியமனம்

  • May 9, 2026
  • 0 Comments

ஹாரியட் ஹார்மன் மற்றும் கோர்டன் பிரவுன் ஆகியோரை புதிய ஆலோசகர் பதவிகளில் நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஸ்டார்மர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வலுப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட கோர்டன் பிரவுன் மிகவும் தகுதியானவர் என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டார். அதேவேளை, ஹாரியட் ஹார்மனை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வலுவான ஆதரவாளர் என பாராட்டிய ஸ்டார்மர், கட்டமைப்பு ரீதியான பெண்வெறுப்பை எதிர்கொள்ள அவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் […]

உலகம் செய்தி

நோட்டோமீது புடின் விமர்சனக்கணை தொடுப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

உக்ரைன்மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ அமைப்பையும் சாடியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றி நாள் அணிவகுப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆண்டுகளை விட இந்த முறை ராணுவக் கண்காட்சிகள் குறைக்கப்பட்ட போதிலும், பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் தேசியவாத உணர்வுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. ரஷ்யாவின் எதிர்காலம் அதன் மக்களின் உழைப்பால் கட்டமைக்கப்படுவதாகக் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் மீண்டும் அமைதி பேச்சு?

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான 2 ஆம் கட்ட அமைதி பேச்சு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இச்சந்திப்பு நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது. அமைதி பேச்சுக்கு அந்நாடு மத்தியஸ்தம் வகித்தது. எனினும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையிலேயே இரண்டாம் சுற்று பேச்சு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவும் […]

இந்தியா செய்தி

சரிந்தது மம்தா பானர்ஜியின் கோட்டை: பாஜக முதல்வர் பதவியேற்பு!

  • May 9, 2026
  • 0 Comments

தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவுசெய்த நிலையில், மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்துக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: மாலை 4 மணிக்கு முடிவு அறிவிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும் என தெரியவருகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைவர் திருமாவளவன இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை நேற்று வழங்கின. காங்கிரஸ் கட்சியும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தவெக வசம் தற்போது 116 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியமைப்பதற்குரிய உரிமையை கோருவதற்குரிய […]

இலங்கை செய்தி

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ரஷ்யா ஆர்வம்!

  • May 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளரும் ரஷ்ய தூதுவரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, குறிப்பாக பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து […]

உலகம் செய்தி

உக்ரைன், ரஷ்யா போரையும் நிறுத்துவேன்: ட்ரம்ப் சபதம்!

  • May 9, 2026
  • 0 Comments

“உலகில் இதுவரை 9 போர்களை நிறுத்திவிட்டேன். உக்ரைன், ரஷ்யா மோதலையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் 3 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ” இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9, 10 […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றின் வெளியே அமிலத் தாக்குதல்!

  • May 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில்  (Greater Manchester) உள்ள துரித உணவகம் ஒன்றுக்கு வெளியே அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி சம்பவம் நேற்று மாலை ஆஷ்டன் (Ashton ) நகர மையத்தில் உள்ள  துரித உணவகத்திற்கு வெளியே நடந்ததாகத் தெரிகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  குறித்த பகுதி தற்போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், அரிக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை, வியட்நாம் ஆராய்வு!

  • May 9, 2026
  • 0 Comments

வியட்நாம் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான General Phan Van Giang இற்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் நேற்று உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், வியட்நாம் அரசாங்கத்திற்கும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழுவிற்கும் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த […]