ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றின் வெளியே அமிலத் தாக்குதல்!

  • May 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில்  (Greater Manchester) உள்ள துரித உணவகம் ஒன்றுக்கு வெளியே அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி சம்பவம் நேற்று மாலை ஆஷ்டன் (Ashton ) நகர மையத்தில் உள்ள  துரித உணவகத்திற்கு வெளியே நடந்ததாகத் தெரிகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  குறித்த பகுதி தற்போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், அரிக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை, வியட்நாம் ஆராய்வு!

  • May 9, 2026
  • 0 Comments

வியட்நாம் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான General Phan Van Giang இற்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் நேற்று உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், வியட்நாம் அரசாங்கத்திற்கும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழுவிற்கும் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த […]

அரசியல் இலங்கை செய்தி

அறவழி எழுச்சியே மலையக மக்களுக்கு தீர்வை பெற்று தரும்!

  • May 9, 2026
  • 0 Comments

மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். வெறும் அரசியல் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடாமல், காணி உரிமைக்கான ஒரு தெளிவான தீர்வு பொறிமுறையை (Solution Mechanism) மக்கள் மயப்படுத்த வேண்டிய தருணம் இதுவென அவர் அறைகூவல் விடுத்துள்ளார். ” காணி உரிமை பற்றிய கருத்தாடல் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் […]

உலகம் செய்தி

ஈரான் தொடர்பில் அமெரிக்கா முன்மொழிந்த யோசனைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டுள்ள தடையை நிறுத்தக் கோரி அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் ஐ.நாவில் முன்மொழிந்த தீர்மானத்தை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. மேற்படி தீர்மானத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்திய ரஷ்யா, அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் வன்முறையற்ற தீர்வுகளை வலியுறுத்தும் ஒரு மாற்றுத் திட்டத்தை சீனாவுடன் இணைந்து முன்வைத்துள்ளது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு அளித்தாலும், ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாக ரஷ்யா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்காவின் இந்த […]

இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படைகளுக்கு புதிய தலைமை தளபதி நியமனம்!

  • May 9, 2026
  • 0 Comments

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30ஆம் திகதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். மேற்படி பதவியை தற்போது வகிக்கும் தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையிலேயே, இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜா சுப்ரமணிக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்துமா குஜராத்?

  • May 9, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் (-0.147) 5-வது இடத்திலும் […]

உலகம்

 ஹன்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலால் 03 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருவருக்கு பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே குறித்த சொகுசு கப்பலில் 140இற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்களில் 34 பேர் ஏற்கனவே கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில்  மருத்துவமனைகளில் சிகிச்சை […]

செய்தி விளையாட்டு

டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 9, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பெதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களைப் பெற்றார். […]

உலகம்

ஈரானுக்கு உதவும் நாடுகள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடை!

  • May 9, 2026
  • 0 Comments

ஈரான்  ஆயுதங்கள் உற்பத்தி செய்ய உதவிய நாடுகள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதற்கமைய சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க கருவூலம் நேற்று பொருளாதாரத் தடைகளை அறிவத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமெரிக்க கரூவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இராணுவத் தொழில் […]

இலங்கை செய்தி

யாழ்.வைத்தியசாலைக்கு விரைந்த ஆளுநர்: மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம்!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட […]