இலங்கை

அமெரிக்க பாடகர் இலங்கைக்கு விஜயம்

  • March 10, 2025
  • 0 Comments

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இன்று சென்றுள்ளார். 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை 08.24 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள அவர், அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் பிரதான பங்கை வகிக்கிறார். ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஸ்ட ஆலோசகர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில், இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலீட்டுத் திட்டத்தைத் […]

இலங்கை

இலங்கை வரும் மதப் பிரச்சாரகர்களுக்கு கடுமையாகும் விசா நடைமுறை!

  • March 10, 2025
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய விரும்பும் வெளிநாட்டு மதப் பிரச்சாரகர்களுக்கு விசா வழங்குவதற்கான கடுமையான நடைமுறைகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு பிரசங்கிகள் தங்கள் ஆசீர்வாத விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை வெறும் சுற்றுலா விசாவில் நடத்துவது மற்றும் உள்ளூர் மத மற்றும் கலாச்சார அதிகாரிகளின் அறிவுரை இல்லாமல் சட்டவிரோத மதப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சுவிசேஷ […]

வட அமெரிக்கா

பென்ஷல்வேனியாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்!

  • March 10, 2025
  • 0 Comments

பென்ஷல்வேனியாவில் முதியோர் இல்லத்திற்கு அருகில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளயுள்ளது. பென்சில்வேனியாவின் மன்ஹெய்ம் டவுன்ஷிப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுப்படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் விமானத்தில் ஐந்து பேர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • March 10, 2025
  • 0 Comments

இலங்கைக்கு மார்ச் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை 37 ஆயிரத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை 37,768 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை 530,746 ஆகும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடுப்பகுதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது அதிளவாக அரை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை – இந்தியாவில் இருந்து அழைத்துவாருங்கள்!!

  • March 10, 2025
  • 0 Comments

தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குங்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் இன்று (10.3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பெருந்தோட்டப் பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நான் முன்மொழிந்தேன். ஆனால் ஜே.வி.பி. இந்த நடவடிக்கையை அப்போது எதிர்த்தது. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் பெருந்தோட்டத்துறை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுங்கள் என அவர் மேலும் […]

பொழுதுபோக்கு

நிதி நெருக்கடி…. லோகேஷின் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது

  • March 10, 2025
  • 0 Comments

மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக லோகேஷின் மற்றொரு படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து வருகிறார்கள். அவ்வாறு லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நிலையில் ராகவா லாரன்ஸ் வைத்து […]

உலகம்

உலகில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

  • March 10, 2025
  • 0 Comments

உலகில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகள் குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அது U.S News & World Report தரவை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வின்படி, டென்மார்க் உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. மேலும், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடுகளில், கனடா ஐந்தாவது இடத்தையும், பின்லாந்து ஆறாவது இடத்தையும் பிடித்தன. இந்தப் பட்டியலில் முதல் 10 […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் 50 சர்வதேச குற்றவாளிகள் கைது – முதியவர் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தல்

  • March 10, 2025
  • 0 Comments

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வியட்நாமில் பல மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 65 வயது பெண்மணி 50வது கைது செய்யப்பட்டார். விக்டோரியாவில் கைது செய்யப்பட்டு, குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 83 வயது முதியவர் சமீபத்தில் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் குழு ஒன்று நாடு கடத்தல்

  • March 10, 2025
  • 0 Comments

நாட்டின் குடிவரவு மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு அதிகாரிகள் குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நாடு கடத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் இந்திய நாட்டினர் குழு செதுக்குபவர்களாக வேலை செய்து வந்ததும், ஒரு மதக் குழுவிற்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்த […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேல் உத்தரவு

  • March 10, 2025
  • 0 Comments

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஹமாஸ் தரப்பினருக்கு அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இன்று டோகாவிற்கு ஒரு குழுவை அனுப்புவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மனிதாபிமான நிவாரணங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவிலுள்ள 6 வெதுப்பகங்ளின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் […]