ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கை தீவிரம் – தயார் நிலையில் விமானங்கள்
ஜெர்மனியில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், நாடு கடத்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு பல நாடுகடத்தல் விமானங்களை ஏற்பாடு செய்யப்போவதாக ஹெஸ்ஸியின் உள்துறை அமைச்சர் ரோமன் போசெக் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், ஜெர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு 43 பேர் ஒரு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஹெஸ்ஸியைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவதோடு அவர்களில் இருவர் குற்றவாளிகளும் ஆவர். விமானங்களுக்கு மேலதிகமாக, ஹெஸ்ஸியிலிருந்து நாடுகடத்தலுக்கு பேருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. […]













