இலங்கை

இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுக்காக கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பில் விசாரணை!

  • March 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே (பிரதான பாதுகாவலர்) திஷான் குணசேகரவிடம் நேற்று (10.3) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் முன்னாள் பிரதமகுருவான விமலரத்ன என்ற நபரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடு கட்டப்பட்டதாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குணசேகர தெளிவுபடுத்தினார். கட்டிடம் கட்டியவர் தற்போது நோய்வாய்ப்பட்டிருப்பதாலும், கோவிலின் […]

ஐரோப்பா

பிரித்தானியா முழுவதும் மோசமான வானிலை : மக்களின் கவனத்திற்கு!

  • March 11, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 48 மணி நேரத்திற்குள் 550 மைல் அகலமான பனிப்புயல் தாக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மிதமான வெப்பநிலை பதிவாகியத்தை தொடர்ந்து இந்த மாதத்தில் குளிரான வானிலை பதிவாகும் என முன்னரிவிப்பளர்கள் எச்சாரித்துள்ளனர். WXCharts இல் உள்ள வரைபடங்கள், இன்வெர்னஸிலிருந்து கார்டிஃப் வரையிலான பகுதிகளில் பனிபொழிவு ஏற்படும் என்பதை காட்டுகின்றன. மத்திய ஸ்காட்லாந்து, எல்லைப் பகுதிகள் மற்றும் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு

  • March 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு வருகையாளர் விசாவில் வந்த பிறகு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டங்கள் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்கள் குறித்து ஆலோசனை வழங்கும் நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் சர்வதேச […]

பொழுதுபோக்கு

சர்கார் படத்தின் ரீமேக் தான் சல்மான் கான் படமா?

  • March 11, 2025
  • 0 Comments

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக உள்ள படம் தான் சிக்கந்தர். இதில் சல்மான்கான் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் ரீமேக் தான் சிக்கந்தர் என்ற ஒரு செய்தி போய் கொண்டிருக்கிறது. இது குறித்து ஏஆர் முருகதாஸ் நேரடியாகவே சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது சிக்கந்தர் படம் புதிய கதையில் உருவாகிறது. மற்ற படங்களின் தழுவலாகவோ அல்லது […]

இலங்கை

கனடாவில் யாழ் யுவதி சுட்டுக்கொலை – மேலும் ஒருவர் காயம்

  • March 11, 2025
  • 0 Comments

கனடாவின் மார்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் ஆல்பிரட் டோர் அப்பாவின் பேத்தியான ரகுதாஸ் நிலாக்ஷி என்ற 20 வயதுடைய பெண் ஆவார். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு கனடாவின் மார்கம் பகுதியில் உள்ள காசில்மோர் அவென்யூவில் அமைந்துள்ளது, மேலும் யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இளம் பெண், இரண்டு […]

செய்தி

பொது மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கோரிய தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர்

  • March 11, 2025
  • 0 Comments

தவறுதலாக சொந்த நாட்டு மக்கள் மீது தென்கொரியா குண்டு மழை பொழிந்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்கா உடனான கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தவறுதலாக தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுமழை பொழிந்ததற்கு தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர் தலைவணங்கி மன்னிப்பு கோரினார். வடகொரியா எல்லைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள போச்சியோன் என்ற இடத்தில் இருநாட்டு படைகளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎப்-16 ரக போர் விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வீடுகள், சர்ச்சுகள் மீது விழுந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத இழப்பு – பீதியில் முதலீட்டாளர்கள்

  • March 11, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் முதலீட்டாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கப் பங்குச் சந்தை நான்கு டிரில்லியன் டொலர் இழந்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த மாதம் 19ஆம் திகதி S&P 500 குறியீடாக உச்சத்தைத் தொட்டது. அப்போது முதல் S&P 500 பங்கு விலைகள் 8 சதவீதம் குறைந்துள்ளன. அமெரிக்க நேரப்படி நேற்று S&P 500 பங்கு விலைகள் ஒரே நாளில் ஆக அதிகமாக 2.7 சதவீதம் குறைந்தன. இவ்வாண்டு ஒரே நாளில் பதிவான […]

செய்தி வாழ்வியல்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத காலை உணவுகள்

  • March 11, 2025
  • 0 Comments

சமீப காலங்களில் பல வாழ்கை முறை நோய்கள் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரோக்கியமான உணவுகளின் இடத்தை துரித உணவுகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் பிடித்துள்ளன. அதேபோல், மக்களின் உடல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன. இவற்றின் காரணமாக பல வித வாழ்க்கை முறை நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். மக்களை அதிக அளவில் பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. […]

இலங்கை

சாதாரண தரப் பரீட்சை – இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • March 11, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டங்கள் மீறப்பட்டால், காவல்துறைக்கும் தமக்கும் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

எலோன் மஸ்க்கின் ‘X’ சமூக ஊடக வலையமைப்பின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்

  • March 11, 2025
  • 0 Comments

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான எலோன் மஸ்க்கின் ‘X’ சமூக ஊடக தளம், உலகளவில் திடீர் செயலிழப்பை சந்தித்துள்ளது. ‘எக்ஸ்’ சமூக ஊடக தளம் பல சந்தர்ப்பங்களில் செயலிழந்தது. மொத்த செயலிழப்பு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ‘X’ சமூக ஊடக தளம் செயலிழந்த மிக நீண்ட காலமாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ‘X’ சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள […]