விக்ரம் படத்தின் ரிலீஸில் சிக்கல்… உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி தடை
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். HR பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இன்று இப்படம் வெளிவரவிருந்த நிலையில், படத்தை எதிர்த்து B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நேற்று (மார்ச் 26) உத்தரவிட்டிருந்தது. […]












