இந்தியா – பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி
பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர்களின் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி ஒருவர் பிடிபட்டார்.இச்சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம், சோனிபட் நகரிலுள்ள ஓ பி ஜிண்டால் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அண்மையில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. விடுதிக் காவலர்கள் அந்தப் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதனுள் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் அதில் தெரிகிறது. மாணவிகளில் ஒருவரே அதனைத் தம் கைப்பேசியில் பதிவுசெய்து வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பயணப்பெட்டிக்குள் மாணவி ஒருவர் இருப்பதை விடுதிக் காவலர்கள் அல்லது […]













