தென் கொரிய விமானப்படை தளத்தை படம் பிடித்த 2 சீன இளைஞர்கள் கைது
தென் கொரிய விமானப்படை தளத்தில் இராணுவ விமானங்களை சட்டவிரோதமாக புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சீன ஆண்களை தென் கொரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மார்ச் மாதம் 21ஆம் திகதி அன்று சியோலுக்கு தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள சுவோன் விமான தளத்திற்கு அருகில் விமானங்களை படம்பிடித்ததாக ஒரு குடியிருப்பாளர் புகாரளித்ததை அடுத்து இந்த கைதுகள் நடந்தன. இரண்டு இளைஞர்களிடமிருந்தும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு டிஜிட்டல் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் […]













