இலங்கை

ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மொஸ்கோவில் மே 26 முதல் 29 ஆம் நாள் வரை நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது சர்வதேச மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதிகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலர் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான […]

பொழுதுபோக்கு

நடுவர்களை கதற விட்ட இலங்கை பெண் : மிரண்டுப் போன சேரன்!

  • May 27, 2026
  • 0 Comments

மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சிக்கு இலங்கை பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார். ‘ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும். ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் work from home?

  • May 27, 2026
  • 0 Comments

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘work from home ’ சிஸ்டம் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் சேமிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு ‘work from home’ சிஸ்டம் பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ […]

உலகம் செய்தி

ஆப்பிரிக்க குடிமக்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை!

  • May 27, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்ககள் கனடாவிற்குள் பிரவேசிக்க தற்காலிகமகா தடை விதிக்கப்பட்டுள்ளது அதன்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் இன்று முதல் 90 நாட்களுக்கு கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவார்கள். கனடவால் எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸின் புண்டிபுக்யோ (Bundibugyo) வகை ஒரு தேசிய பெருந்தொற்றாக […]

உலகம்

சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை : தவிடுபொடியாகும் வல்லரசு கனவு!

  • May 26, 2026
  • 0 Comments

சீனாவில் தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் பணியகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள்தொகை சரிவை மாற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சீனாவின் ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகையில், குறைந்தது 15.87 சதவீதத்தினர் 65 […]

உலகம்

எபோலா தொற்று பற்றிய போதிய தெளிவின்மை : கட்டுப்படுத்துவதில் சிரமம்!

  • May 26, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மையப் பகுதியில் வாழும் மக்கள்  எபோலா வைரஸ் பற்றிய போதிய விளக்கத்தை கொண்டிராதமையால் நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ActionAid DRC நடத்திய மதிப்பாய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்களில் 64 சதவீதம் பேர் மட்டுமே எபோலா உண்மையானது என நம்புவதாக தெரியவந்துள்ளது. ஏனையோர் அதனை பொய்யாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே குறித்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் […]

ஐரோப்பா

இங்கிலாந்தை உலுக்கும் வெப்ப அலை : 04 சிறுவர்கள் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் 34.8°C என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் 36°C  வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவ்வாறு நீரில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

ஹொங்கொங் சென்ற விமானத்தில் நெருக்கடி நிலை!! 10 பேர் காயம்!

  • May 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானமொன்று கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவிற்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் 10 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 240 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய ஏர்பஸ் A350-900 ரக விமானமான CX156 என்ற விமானமே மேற்படி அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு பயணிகள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பழமையான மின்கட்டமைப்பை திருத்த முன்மொழிவு!

  • May 26, 2026
  • 0 Comments

பழமையான மின் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு  ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. இதற்கு சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம், மற்ற நாடுகள் அத்தகைய ஏற்பாட்டைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று  கேட்டுக்கொண்டுள்ளன. புதிய எரிசக்தி திட்டங்களுக்கான  ஒப்புதலை பெறுவதென்பது,   அரசியல் ரீதியாக மிகவும் பதற்றமூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது. மின்கட்டமைப்புத் தொகுப்பின் கீழ் உள்ள சட்ட உரைகள், “அனுமதி வழங்கும் நடைமுறைகள் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்குத் தடையா? சிஐடியில் முறைப்பாடு!

  • May 26, 2026
  • 0 Comments

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – […]